பக்கம்:இலக்கண வரலாறு.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422

வணக்கத்தை முதற்கண் கொண்டுளது. உவமை முதல் ஏதுவணி முடிய இலக்கணமும் எடுத்துக்காட்டும் உள்ளன. சுவை முதல் எடுத்துக்காட்டுப் பிரமாணம் முடியவுள்ள 15 அணிகளுக்குச் சான்று காட்டப்படவில்லை. சேர்வை முதல் ஓரே சொல்லை அணுகி விளங்கும் கலவை முடியவுள்ள 5 அணிகளுக்கு உரைநடையிலேயே இலக்கணம் உள்ளது.

கட்டளைக் கலித்துறை ஒவ்வொன்றும் எட்டையபுரம் மன்னரை முன்னிலைப் படுத்திப் பாடுவதாய் அமைத்துள்ளது.

“திருவளர் எட்டபுரம் வாழ் குமாரெட்ட சீதரனே”

என்பது இரண்டாம் பாடல் விளி. “சிந்தைக்கு இசை எட்டமகேள்” என்றும் விளித்துப் பாடுகிறார் (12). எடுத்துக்காட்டுகளையும் அவ்வக் காரிகையிலேயே வைக்கும் இவர், அதனை ‘இலக்கியம்’ என வழங்குகின்றார். உதாரணம் என்பதையும் காட்டு என்பதையும் வழங்குகின்றார்.

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/467&oldid=1471573" இலிருந்து மீள்விக்கப்பட்டது