பக்கம்:இலக்கண வரலாறு.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

427

புறப்பொருளில், நிலத்தியல்பு, உழியியல்பு, வேற்றுயிரியல்பு, கருவியியல்பு, தொகுப்பியல்பு என்பனவும், அகப்புறப் பொருள் நிலையும் கூறப்படுகின்றன.

“பூவில் மணமெனப் புனிதத் தமிழினுக்(கு)
ஆவி யாகும் அகப்பொருள் இயல்பே”

என்கிறார் (4). குழல் முதல் அடி வரை உறுப்புகளை உவமைப்படக் கூறுவது உறுப்பியல்பு. (உவமான சங்கிரகம் காண்க). ஏழ்பருவ இயல் கூறல் குறியியல்பு; மகளிர் வயப்படும் மாந்தரியல் பகர்வது பழமை யியல்பு. காண்டல் ஐயம் முதலியவை கூறல் துறை யியல்பு. நிலத்தியல்பு என்பது குறிஞ்சி முதலியன. உழி என்பது அருந்தவர் அந்தணர் முதலியோர் இருப்பிடம் பற்றியன. வேற்றுயிரி என்பது விலங்கு, பறவை பற்றியன.

யாப்பிலக்கணத்தில் இயலிசைத் தமிழியல்பு, நாடகத் தமிழியல்பு, வண்ணவியல்பு, மோனை இயல்பு, எதுகை யியல்பு, நாற்கவியியல்பு, பனுவல் இயல்பு என்பவை கூறப்பட்டுள்ளன.

“மோனை இல்லா முத்தமிழ்ப் பாட்டு
நாண மில்லா நங்கையொப் பாமே” (96)

“பனுவலின் முகத்துத் திலகம் போல்வது
பாயிர மாமெனப் பகரத் தகுமே”
(120)

இவை மோனையும், பாயிரமும் பற்றியன.

அணியிலக்கணம் உவமையியல்பு, உடைமை இயல்பு, கற்பனை இயல்பு, நிகழ்ச்சியியல்பு, ஆக்கவியல்பு என்பவற்றை விரிக்கின்றன.

புலமையிலக்கணம் நூற்காப்பு, தவறியல்பு, மரபு இயல்பு செயல் வகை இயல்பு, நடுநிலை, எதிர்நிலை, அருள் நிலை என்னும் பகுப்புகளைக் கொண்டது.

“தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனில்
அஃதுணர் அலகையில் தாழ்வெனல் அறமே”
(30)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/472&oldid=1474756" இலிருந்து மீள்விக்கப்பட்டது