பக்கம்:இலக்கண வரலாறு.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428


“ காசுப் புள்ளென இனத்தொடு கலவாது
ஞானிபோற் பகைக்கும் நாவலர் பலரே ” (38)

“ கால வேற்றுமை கருதாப் புலவன்
சீலனே எனினும் சிறுமை யினனே (51) ”

“தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதெனில்
வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே ”
(63)

இவை புலமை இலக்கணத்தில் உள்ளவை. இன்றும் என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியவை இந்நான்குதாம் இத்தகைய என்பவில்லை. எல்லாமும் சீர்மையவே. புலவரென்பார் அனைவரும் போற்றிப் பயின்று கடைப்பிடியாகக் கொள்ளத் தக்கவை புலமையிலக்கணப் பகுதிகள்.

துறவோர் மெய்ந்நூல் கண்டதுண்டு; புகழ் நூல் யாத்தவை யுண்டு; தொன்மம் பாடியதுண்டு. ஆனால் இலக்கண நூல் செய்தார் எவர்? சமணத் துறவோர் இலக்கணம் பலப்பல இயற்றியவை பழஞ்செய்தி. இம் மண்ணின் மணமாய் விளங்கிய சமயத் துறவோர் எவர் செய்தார்? தண்டபாணி அடிகளார் செய்தார். ஈசான தேசிகர் இலக்கணக் கொத்துச் செய்திலரோ என்பார் குரல் கேட்கவே செய்கிறது! ஆனால் தமிழ் வண்ணச் சரபத்தினரைச் சுட்டிக் காட்டும் இடத்தே, தொட்டுக் கூறவும் கூடாத தமிழ்ப் பழி தேடிக் கொண்டாரே அவர்! அன்றியும் இலக்கணக் கொத்தினை நூலெனக் கூற முடியுமோ?

தமிழை அறியாத் தெய்வம் உண்டு என்று எவரேனும் கூறினால், அத்தெய்வத்தைத் தெய்வம் என்னேன்; அலகை (பேய்) அது என்பேன் என்னும் துறவோர் பிறர் எவர்?

தமிழ்ப் பற்றிற்கு ஓர் அளவுகோல் வைக்கின்றாரே! உலகத்து உயர் மொழி தமிழே; அதனை உணரான் ‘புலவன்’ அல்லன், ‘புலவோன்’ (தசைப் பிண்டம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/473&oldid=1474767" இலிருந்து மீள்விக்கப்பட்டது