இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
429
என்கிறாரே! இளங்கோவடிகளுக்குப் பின்னர் வாய்த்த தமிழ்க் காதல் துறவி வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளார் என்க.
பதிப்பு
அறுவகை இலக்கணம் அட்டாவதானம் பூவை. கலியாணசுந்தர முதலியாரால் 1893 இல் பதிப்பிக்கப்பட்டது (விசய, கடகரவி). அப் பதிப்பு ஆறாம் இலக்கணத்தின் பின்னே ஏழாம் இலக்கணமொன்றும் உடையது. அது அறுவகை இலக்கணத்தின் ஒழிபும் விரிவுமாம். அடுத்த பதிப்பு சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் தவத்திரு சுந்தரம் அடிகளார் பொன் விழா வெளியீடாக 1978 இல் வெளி வந்தது. முதற் பதிப்பில் இருந்த சிறப்புப் பாயிரங்கள் (பேராசிரியர் கந்தசாமியார், பூவை. கலியாணசுந்தரர் பாடியவை) இப்பதிப்பிலும் இடம் பெற்றுள்ளன. புதிய குறிப்புரை, ஆய்வுரை ஆகியவை பொருந்தியுன.