பக்கம்:இலக்கண வரலாறு.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

433


“இப்பொருள் இவ்வா றிருக்குமென் றறிய
அப்பொருள் இயற்கையை அறைவதே இலக்கணம்”

என்கிறார் (2).

“முதனிலை செயலின் பொருள் புலப் படுத்தும்”
“இடைநிலை காலம் இதுவெனக் காட்டும்
எதிர்மறை காட்டும் இடைநிலை யும்உள”
“இறுதிநிலை திணைபால் எண்ணிடங் காட்டும்”

இவை உறுப்பியலில் இடம் பெற்றவை (2-4).

“காலங் காட்டும் இடைநிலை யோடு
விகுதியும் மறைந்த பெயரெச்சம் வினைத்தொகை”

என்பது வினைத்தொகை இலக்கணம் (சொல். பொது. 6).

“சொல்லே ஆயினும் சொற்றொட ராயினும்
பாவின் முதலிடை கடையெனப் பட்ட
இடங்களில் நின்று மடங்கி வந்து
பலபொருள் தருமெனின் மடக்கெனப் படுமே”

என்பது மடக்கனி இலக்கணம்.


ஆசிரியர் நோக்கு புதுமைகாணல் அன்று. எளிமையாக்கல் அதில் வெற்றி பெற்றுள்ளமை வெளிப்பாடு.


இ.வ—28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/478&oldid=1474801" இலிருந்து மீள்விக்கப்பட்டது