பக்கம்:இலக்கண வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


நூல் என்னும் பெயராலேயே நாடகத் தமிழ் நூல் ஒன்று இருந்ததைக் குறிக்கிறார் அடியார்க்கு நல்லார். அந்நூற்பாவையும் சுட்டுகிறார் (சிலம்பு; உரைப்பாயிரம்).

குண நூல், கூத்த நூல், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், நன்னூல், சின்னால், தொன்னூல் விளக்கம் என்னும் பெயரின வெல்லாம் இலக்கண நூல்களே என்பதும், நூல் யாத்தற்குரிய பாவே ‘நூற்பா’ எனப் பட்டது என்பதும் எண்ணத் தக்கன. இலக்கணப் புலவர் ‘நூல் நவில் புலவர்’ எனப்பட்டனர் (தொல், 1411) என்பதும் எண்ணத் தக்கதே.

அடிவரையறை இல்லாத செய்யுள்களை யுரைக்கும் தொல்காப்பியர் ‘நூலினான’ என்றதும், “அவற்றுள், நூலெனப் படுவது நுவலுங் காலை” என அதன் இலக்கணம் நூற்பதும், ‘நூற்பா’ என்னும் பின்னாட்சிக்கு முன்னோடிகள் (தொல், 1421, 1422).

நூற்பா என்பதைத் திவாகரர் அதன் யாப்பியல் விளங்க ‘நூற்பா அகவல்’ என்றார்;

“நூற்பா அகவல் துணங்க நாடில்
சூத்திரங் குறித்த யாப்பிற் றாகி
அடி வரை யின்றி விழுமிதின் நடக்கும்”

என அதன் இலக்கணம் கூறினார்.

“நூல் என்பது இடுகுறியால் பெற்ற பெயர்” என இறையனார் களவியலுரை, நன்னூல் மயிலை நாதருரை ஆகியவை குறிக்கும்.

“இடுகுறியால் பெயர் பெற்றன நிகண்டு, நூல், கலைக் கோட்டுத் தண்டு” என்பது களவியல் (1). இதனையே மயிலைநாதர் உரையும் குறிப்பிடும். (நன்னூல். 48).

நூல் இன்னதென விளக்கும் இறையனார் களவியலுரை, “நூல்போறலின் நூல் என்ப” என்று தொடங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/48&oldid=1471344" இலிருந்து மீள்விக்கப்பட்டது