பக்கம்:இலக்கண வரலாறு.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

437


“தமிழ் நூல் எனப்பெயர் தந்தது தமிழ் நூல்களைப் பயிலுதற் காய கருவிநூல் எனற்கே. அன்றியும் தமினூல் (வாழ்தன் — வாணன்) எனத் திரித்துக் கூறித் தனிப்பெயர் ஆக்கலூம்” என்கிறார் ஆசிரியர் (18).

நூல் தோன்றுதற் காரணத்தையும் ஆசிரியரே கூறுகிறார்:

“இலக்கண நூல் தொடர் பிடையீட்டாலும், பாடத்திட்டங்குறித்த வகுப்பிலக்கண நூல்களின் பிழைபாட்டாலும், எழுத்துச் சீர்திருத்தம், பொருள்தரா உறுப்புக்கூறு, தொகையின் சேனாவரையத் தகைமை, செய்தித் தாள்களின் மொழிக் கொலை, புதுப் பொதுச் செய்திகள், தவிரத்தக்கன தழுவத்தக்கன, தொடர்ப்பாடு ஆகிய வற்றின் புதுக்கம் நோக்கி எழுந்தது நூற்காரணம் என்க” என்பது அது (19).

வரிவடிவ மாற்றம் (37-43), சொற்றிரிபு (320-335), வழுவமைதி (336-342), தொடரமைதி (382.414), நிறுத்தக் குறிகள் (415-433) என்பவை இக்கால இலக்கண மொழிப் பயிற்சி உரைநடை நூல்களிலன்றிப் பழைய இலக்கணங்களில் காணப்படாதவை. தொன்னூல் விளக்கம், அறுவகை இலக்கணம் என்பவை சில பல புதுநெறிகளைக் கொண்டிருப்பினும் அவற்றிற் காணாத பின் வளர்ச்சி காட்டுவன இவை.

வரிவடிவ மாற்றம் பற்றியும், வடமொழியெழுத்துத் திரிபு பற்றியும் கருத்து வேற்றுமைக்கு இடமுண்டு. பாவாணர் முகவுரையும், வ. சுப. மாணிக்கனாரின் இலக்கணப் படைப்புகள் என்னும் கட்டுரையும் இதற்குச் சான்று.

செய்யுளிலேயே வடவெழுத்துப் புகாச்சால்பு, முற்ற முற்ற வடசொற்களைப் புகுத்தியவர் மாட்டும் 19ஆம் நூற்றாண்டு வரை போற்றப்பட்டது. அவர்கள் இயற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/482&oldid=1474838" இலிருந்து மீள்விக்கப்பட்டது