பக்கம்:இலக்கண வரலாறு.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

441


இயைபையும் எதுகை தானே பின்னுறலாக் கொள்கிறார். முரணும் அளபும் பழைமை சிறப்பில எனத் தள்ளுகிறார் (48).

“சந்தம் சிந்தென ஒலிப்பா இருபா”

என வண்ணப் பாக்களை வகுக்கிறார் (131).

தொல்காப்பியர் கூறும் 20 வண்ணங்களில் ‘இன்று வருவது ஆறே’ என எண்ணுகிறார் (132). அவை வல்லிசை, மெல்லிசை, இயைபு, நெடுஞ்சீர், குறுஞ்சீர், சித்திரவண்ணம் என்பன.

“விரும்பும் வீச்சில் சொல்லத் தடுத்தலின்
அரும்பும் பாவலர் அமைத்தது புதுப்பா”

எனப் புதுப்பாவின் தோற்ற முரைக்கிறார். அதன் சிறப்பும், அதற்குத் தேவையும் சுட்டப் பெற்றுள்ளன (140-141).

இசைப்பா (142), திரைப்பா (143-147), மகப்பா (148-151) என்பன நூற்பா எண்ணிக்கை சுருங்கிலும் விரிவான ஆய்வுடையன. மேற்கோள்களும் மிகவுடையன. வார்ப்பியலில் சில நூல்களின் இலக்கணம் கூறப்படுகின்றன.

அடைவு என்னும் பகுதியில் சிலப்பதிகாரம், தாயுமானவர் பாடல், பரிபாடல், கலித்தொகை, திருக்காவலூர்க் கலம்பகம், ஆகியவற்றின் யாப்பியன் முறைப்பட்டியல் உள்ளது.

ஆள் ஆடைவு என்னும் தலைப்பில் 9 நூற்பாக்கள் உள. பழங்காலப் புலவர்களொடு இக்காலப் புலவர்களை ஒப்பிட்டு இவர் சாயல் இவரென்பது கூறப்படுகின்றது.

புதுவகையில் விரிவான யாப்பியல் நூல் செய்தற்குரிய முன்னோடி நூல் ஈதென்பது தகும். நூலாசிரியர் கடிய முயற்சி நூலில் தெளிவாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/486&oldid=1475026" இலிருந்து மீள்விக்கப்பட்டது