பக்கம்:இலக்கண வரலாறு.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

443

தக்க நூல் திருக்கோவைக்கு அமைந்த கிளவிக் கொத்து என்பது தகும்.

பேராசிரியர் உரையும் இக்கிளவிக் கொத்துக்கு இருப்பதால் அதன் பழமை புலப்படும். நூலாசிரியராம் மாணிக்கவாசகர் இயற்றியது அன்று என்பதும் ஆய்ந்தோர் முடிபு. அவ்வாறே பேராசிரியர் இயற்றியதும் அன்று என்பதும் அவர்கள் முடிபு. ஆகலின் மாணிக்கவாசகர் நூல் செய்துள்ள அடைவை நோக்க அவர்க்கு முன்னரே இக்கிளவிக் கொத்து நூலாகி நடையிட்டிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். இல்லையேல் மாணிக்கவாசகர் திருக்கோவையை இயற்றிய பின்னர் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலென இக்கிளவிக் கொத்து ஒருவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.

‘ஈரொன்பான் நீங்கா இயற்கை’

என இயற்கைப் ' புணர்ச்சி 18 துறைகளையுடைய தென்றும்,

“ஆறைந்தும் துன்று பாங்கற் றுறை”

எனப் பாங்கற் கூட்டம் 300 துறைகளை யுடையதென்றும் இவைபோல அறுதியிட்டுக் கூறுதல் இதன் வரம்புச் சிறப்பைக் காட்டும். உரையிடைக் கண்ட நூலாகலின் காலங்கருதாது, உரைநடை இலக்கணப் பகுதிக்கு முன் வைக்கப்பட்டது. திருக்கோவைக் கொளுவும் இவ்வாறே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/488&oldid=1475063" இலிருந்து மீள்விக்கப்பட்டது