பக்கம்:இலக்கண வரலாறு.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49. திருக்கோவைக் கொளு


திருக்கோவையார் 400 துறைகளுக்கும் 400 கொளுக்கள் உண்டு. அக்கொளுக்கள் புறப்பொருள் வெண்பா மாலையின் வெண்பாவில் கூறப்படும் இலக்கியப் பொருளுக்கு வாய்த்த இலக்கணமாக அமைந்துளது. திணைப் பாடல்களும், அத்திணையின் துறைகளை விளக்கும் கொளுக்களும், அக்கொளுக்கூறும் இலக்கணத்திற்கு இலக்கியமாகும் வெண்பாவும் என அந்நூல் இயலும் மரபில் திருக்கோவையாரும் இயல்கின்றது.

கிளவிக் கொத்தும், கொளுவும் கோவைப் பாடலு மென அமைகின்றன. திருக்கோவையார் பழைய உரையில் கொளு முற்படவும் கோவைப் பாடல் பிற்படவும் அமைந்து நடத்தல் புறப்பொருள் வெண்பா முறைக்குச் சான்றாகும். பழைய உரைக்குப் பிற்பட உரை வரைந்த பேராசிரியர் அக் கொளுவைக் கோவைப் பாவுக்குப் பின்னர் வைத்தார். வைப்பு முறையில் வேறு படலன்றிக் கொளுவில் வேறுபட்டிலர். இக்கொளுவை மணிவாசகரே இயற்றினார் என்பது ஆய்வாளர் முடிபு. அவ்வாறாயின் கோவை இலக்கியம் படைத்ததை அன்றி அகப்பொருள் இலக்கணம் ஒன்றும் அடிகள் படைத்தாராதல் வேண்டும். அக்கருத்து முந்தையோர்க்கு இருந் திருக்குமெனின் அவ்விலக்கணக் கொடையைக் குறிப்பிடத்தவறார் என்றே கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/489&oldid=1475082" இலிருந்து மீள்விக்கப்பட்டது