பக்கம்:இலக்கண வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

வளி மறையாக, வெயில் மறையாக, மழை மறையாக, பனி மறையாக, மான மறையாக இருந்தால் போதுமென ஒரு காலத்தில் மாந்தர் தம் வீடுகளை அமைத்துக் கொண்டனர். அமைத்து அமைத்துப் பெற்ற பட்டறிவும், வாழ்க்கையில் நேர்ந்த இயற்கைத் தூண்டல்களும் தேர்ச்சிகளும் படிப்படியே வளர இந்நாள் வளமனைகள் உருவாகி வருகின்றன. முதன்முதன் மாந்தர் வரைபடம் போட்டுக் கொண்டு மனை அமைத்தார் அல்லர். இந்நாள் வரைபடம் போட்டு ஆட்சியர் ஒப்புகை இல்லாமல் நம் உரிமையான மனை இடத்திலும் மனையெழுப்ப இயலாது. இந்நாள் கட்டட வரைபடம் இலக்கணம் அன்னது. முந்தை மாத்தர் கட்டிய மனைகள் இலக்கியம் ஒப்பது. சிலப்பதிகாரத்தைப் பயின்ற ஒருவர் காப்பிய இலக்கணம் வகுத்தார் எனின் அவர் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பினார் என்க. இதனைத் தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பிய இலக்கணத்தொடு ஒப்பிட்டுக் கண்டு கொள்க.

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பியது ஒரு நிலை. இலக்கணம் கண்டு இலக்கியம் படைத்தல் ஒரு நிலை. இவற்றுள் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதலே இயற்கை முறை; வளர்ச்சி முறை. ஆனால் இடைக்கால பிற்காலங்களில் இலக்கணங்கண்டு அதற்கு ஏற்ப இலக்கியம் படைக்கும் முறையை மேற்கொண்டமையால் ஒரே பொறிவினைப் படைப்புப்போல இயக்கியங்கள் அமைந்தன. புத்திலக்கண நெறிகளும் வளராமல் பெரிதும் கூறியது கூறலாகவே அமைந்தன.

“பழையன கழிதலும் புதுவன புகுதலும்
வழுவல காலவகையி னாலே”

என்றிருந்தும்,

கடிசொல் இல்லை காலத்துப் படினே

என்றிருந்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/53&oldid=1471349" இலிருந்து மீள்விக்கப்பட்டது