பக்கம்:இலக்கண வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

v

அமையவேண்டுமோ அவ்விலக்கணங்களுக்கு ஏற்ப இவ்விலக்கண வரலாறு அமைந்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இலக்கண வல்லுநர்களின் மொழி இயல் அறிஞர்களின் கூட்டு முயற்சியால் ஆறு இலக்கணக் கருத்தரங்குகளைச் சீரோடும் சிறப்போடும் நடத்தியது. கருத்தரங்கில் பங்குபெறும் போதெல்லாம் விரிவான இலக்கண வரலாற்றின் வளர்ச்சியை நான் உணர்ந்தேன். இலக்கணக் கொள்கைகளின் வளர்ச்சியை வரலாற்று முறையில் விளக்கும் நூல் தேவை என்பதையும் நன்கு உணர்ந்தேன்.

பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் வழி இருபதாண்டுகளாக வெளிவரும் ஐம்பத்தாறு ஆய்வுக் கோவைகளிலும் இலக்கணம் உரையாசிரியர் பற்றிய பல நூறு சிந்தனைகள் சிதறிக் கிடப்பதையும் சிந்தித்தேன்.

காலத்தின் வளர்ச்சிக்கேற்ப அறிவியல் அணுகு முறையில் இலக்கண வரலாறு ஒன்று உருப்பெறுதல் நன்று என்று கருதி அதற்குரியார் யாரெனத்தேடி இளங்குமரனாரே தக்கார் எனத் தேர்ந்து இப்பெரும் பணியினைச் செய்து தரும்படி வேண்டிக்கொண்டேன். இலக்கண வரலாறு காலத்தின் கட்டாயம். இற்றை ஆய்வாளர்களுக்குக் கருத்துச் சுரக்கும் அமுத சுரபியாகும்.

இந்நூலை எழுதிய அறிஞர் இளங்குமரன் அவர்கள் இலக்கணப் புலவர். இலக்கியச் செல்வர், தமிழ் மரபு காக்கும் மரபினர். நுழைபுலம் மிக்க ஆய்வாளர், கற்றது விரித்துரைக்க வல்ல பேராசிரியர். கற்றபடி நிற்கும் சான்றோர். குறள்கூறும் செந்நெறியில் ஒழுகும் செம்மல். பீடு நடையினர், பெருமித வாழ்வினர். தமிழ்ப்பணியையே தலையாய பணியாகக் கொண்டு வாழும் திருமகனார். மொழி ஞாயிறு பாவாணர் வழியில் வேர்ச்சொல் ஆராயும் வித்தகர். தமிழ்க்கல்வி இயக்கம் கண்ட தலைமைசால் பேராசிரியர் செம்மல் வ.சுப.மாணிக்கனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/6&oldid=1508019" இலிருந்து மீள்விக்கப்பட்டது