பக்கம்:இலக்கண வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

3. அகத்தியம்


அகத்தியரைப் பற்றியோ அவர் இயற்றியதாகச் சொல்லப்படும் அகத்தியத்தைப் பற்றியோ தொல்காப்பியத்திலும் அதன் பாயிரத்திலும் எக்குறிப்பும் இல்லை என்பதை அறிந்தோம். அவ்வாறே பாட்டு, தொகை எனப்படும் சங்க நூல்களிலும் எக்குறிப்பும் இல்லை.

பரிபாடலில் வரும் "பொதியின் முனிவன்" என்பதற்கு அதன் பழைய உரையாசிரியர் பரிமேலழகர் "அகத்தியன் என்னும் மீன்" என உரை வகுத்துள்ளார் (11:11). அதனை மூல நூலாட்சியெனக் கொள்ளல் சாலாது.

"அமர முனிவன் அகத்தியன்" என மணிமேகலையிலே தான் அகத்தியன் என்னும் பெயராட்சி, தமிழ் இலக்கண இலக்கியப் பரப்பில் முதன் முதலாகக் கேட்கப்படுவதாம். சிலம்பிலும் அப்பெயராட்சி இல்லை. அடியார்க்கு நல்லார் அரும்பத உரைகாரர் நச்சினார்க்கினியர் முதலியோர் உரைகளில், பொதியம், தவமுனி, திருமுனி என வருமிடங்களில் அகத்தியன் என்னும் பெயராட்சி வருதல் அன்றி மூல நூலாட்சி இல்லையாம். ஆனால், இதற்கு மறுதலையாக வடமொழி நூல்களில் அகத்தியன் என்னும் பெயராட்சி உண்மை விளங்குகின்றது.

வடமொழி 'ஆதிகாவியம்' எனப்படும் வான்மீகத்தில் அகத்தியர் சுட்டப்படுகிறார். அவரும், விந்தமலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/64&oldid=1471359" இலிருந்து மீள்விக்கப்பட்டது