பக்கம்:இலக்கண வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


சார்த்து ஒருவரும், தென்னாட்டில் ஒருவரும் என இருவர் என்பர். அவலோகிதன் என்பானிடம் தமிழ் கேட்ட அகத்தியர் ஒருவரும் சுட்டப்படுவர். 'ஆகஸ்தம்' என்னும் சொல்லுக்குத் தெற்கு, தென்னாடு, தென்மொழி என்னும் பொருள்களும் உண்டு என்றும், அப்பொருள் அகத்தியர் தொடர்பால் வந்தது என்றும் கூறுவர். ஆனால் அவ்வாறு அகத்தியரைச் சுட்டும் இடத்தும் அவர் தமிழ் வல்லார் என்றோ, இலக்கணம் செய்தார் என்றோ குறிப்பு இல்லை என்றும் கூறுவர். (தமிழ் வரலாறு; முதற்றொகுதி. இரா. இராகவ ஐயங்கார். (பக்: 190-214.)

"இவரை (அசுத்தியரை) 'அமரமுனிவன்' என்பது முதலாகக் கூறுவன எல்லாம் வடநூலில் வேதம் இதிகாசம் புராணங்களிற் கேட்கப்படும் அகத்திய சரிதத்தை நெடுங்காலம் பிந்தியவராகிய இவர்க்கு ஏற்றி வழங்கியனவாக நினைப்பது பொருந்தும். ஒன்றோடு ஒன்று ஒவ்வாக் கால வேற்றுமையில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளை இப்பொதியின் முனிவர்க்கு ஏற்றுதல் சிறிதும் பொருந்தாமை காண்க." (௸. பக். 213)

"முதன்முதல் வடநாட்டினின்று தென்னாடு புக்க அகத்தியர் வடபால் வித்தியத்தையடுத்தும் தென்பால் மகேந்திரத்தை யடுத்தும் வதிதல் கூறிய வான்மீகத்தில் அவரைத் தமிழறிவுடையவராகக் கூறாமை ஈண்டைக்கு நினைக்கத் தகும். அநுமானுக்குத் தென்னாட்டு மொழியுணர்ச்சியும் வடமொழியுணர்ச்சியும் உடன்பட்டுக் கூறும் வான்மீகி முனிவர் அகத்தியரைச் சிறிதும் தென்மொழி யுணர்ந்தவராகப் புகலாமை பெரிதும் வியப்பைத் தருவதாகும். அவர் தமிழ் நாட்டரசரையும் அவருட் பாண்டியர் தலைநகரையும் கூறுதல் காண்க." (௸. பக். 214)

“வியாச பாரதம் சபாபருவத்தில் சகதேவன் 'மலயத்தை வலஞ்செய்து தாமிரபரணியைக் கடந்து கடற்கரையைச் சேர்ந்து தங்கினன்' என விளக்குதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/65&oldid=1471360" இலிருந்து மீள்விக்கப்பட்டது