பக்கம்:இலக்கண வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

வேந்தனாகவும் திகழ்ந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையம். இவ்வாறாகவும், 'அகத்தியர்' அரங்கேற்றத்தில் முகங்காட்டினார் அல்லர்; பாயிரம் பாடினார் அல்லர். பாயிரத்தில் பாடப்பட்டாரும் அல்லர்; நூலின் அகத்தும் சுட்டிக் காட்டப்பட்டார் அல்லர். இந்நிலை, தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர்க்கு ஒரு பொருந்தாமையைத் தோற்றுவித்தது. பொருத்திக் காட்ட வேண்டும் என்னும் எண்ணம் அவர்க்குக் கிளர்த்தது. அதற்கு வடமொழி தென்மொழி நூல்களில் ஆங்காங்குக் கிடைத்த குறிப்புகள் துணை செய்திருக்க வேண்டும். அதனால் இடைக்காலப் புலவர்களைப் பற்றிப் பிற்காலப் புலவர்கள் புனைந்துள்ள புனைவுகள் போல, அகத்தியரையும் தொல்காப்பியரையும் குறித்து ஒரு புனைவு வரைந்தார்:

'பாண்டியன் மாகீர்த்தி இருபத்து நாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானாதலின், அவனும் அவன் அவையிலுள்ளோரும் அறிவு மிக்கிருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற்கெல்லாம் குற்றம் தீர விடை கூறுதலின் 'அரில்தப' என்றார்.

"அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோகம் ‘நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேௗற்க’ என்று கூறுதலானும் தொல்காப்பியனாரும் பல்காலும் சென்று 'யான் செய்த நூலை நீர் கேட்டல் வேண்டும்' என்று கூறுதலானும், இவ்விருவரும் வெகுளாமல் இந்நூற்குக் குற்றம் கூறி விடுவலெனக் கருதி அவர் கூறிய கடாவிற் கெல்லாம் விடை கூறுதலின் 'அரில்தபத் தெரிந்து' என்றார்.

“அவர் கேௗன்மின் என்றதற்குக் காரணம் என்னை? எனின், தேவரெல்லாங் கூடியாம் சேர இருத்தலின் மேருத் தாழ்த்து தென்றிசை உயர்ந்தது. இதற்கு அகத்தியனாரே ஆண்டு இருந்தற்குரியர் என்று அவரை வேண்டிக்கொள்ள,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/70&oldid=1471365" இலிருந்து மீள்விக்கப்பட்டது