பக்கம்:இலக்கண வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

இக்கருத்தை உறுதி செய்வதற்குப் பலப் பலவற்றைத் தொகுத்துக் காண வேண்டுவதில்லை. பேரகத்தியத் திரட்டு என வெளி வந்துள்ள நூலை மேலோட்டமாகப் பார்த்தாலே தெளிவாகி விடும்.

அந்நூலின் நூற்பாக்களையும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய முத்துவீரியத்தையும் பக்கம் பக்கம் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் முத்துவீரியத்தை ஒத்த காலத்தது அல்லது அதனைத் தழுவி யாத்தது என்னும் உறுதிக்கு வரலாம். இவற்றுள்ளும் பிற்கருத்தே கொள்ளற்குரிய தென்பதைச் சொல்லாட்சிகள் மிக நன்றாகக் காட்டிக் கொடுக்கின்றன.

முத்துவீரியர் தாம் அகத்தியத்தின் வழியாக நூல் செய்தமை சுட்டுகின்றார். அப்படிச் சொல்வதிலே ஒரு பெருமையுண்டு என்று கருதிக் கொண்டார் என்பதை யன்றி அவர் காலத்தில் முத்தமிழ் இலக்கணம் கூறும் அகத்திய நூல் இருந்ததில்லை என்பது வெளிப்படையில் வெளிப்படை.

“அகத்திய நூல்வழி, முத்துவீரியமெனத் தற்பெயர் நிறீஇ வகுத்தனன்” என்பது சிறப்புப் பாயிரம். வீரமாமுனிவர்க்குக் காலத்தால் பிற்பட்டவர் முத்துவீரியர். அவர் 'முத்து வீரமா முனிவன்' என்றும் சொல்லப்படுகிறார்.

"அச்சாவி சுரம்பூத மாமுயி ரென்பு”
"அச்சாலி சுரம்பூத மாமுயி ரின்பெயர்"
“குறுமை இரச்சுவம் குறிலெனப் படுமே”
“குறிலும் குறுமையும் இரச்சுவமும் குறிற்பெயர்”
“நெடுமையும் தீர்க்கமும் நெட்டுயி ராகும்”
“நெடிலும் நெடுமையும் தீர்க்கமும் நெடிற்பெயர்”

இவை உயிர், குறில், நெடில் என்பவற்றைக் குறிக்கும் பல சொற்கள். இவற்றுள் முன்னது முத்துவீரியம், பின்னது பேரகத்தியத்திரட்டு. இப்படி இரண்டும் ஒத்த சொற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/75&oldid=1471377" இலிருந்து மீள்விக்கப்பட்டது