பக்கம்:இலக்கண வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

களைக் காட்டுவதுடன், பேரகத்தியம் மிகுதியான சொற்களைப்பெய்து காட்டுவதைக் காண்க;

“ஊமையும் ஒற்றும் உடலெனப் படுமே”
“உடல்உடம் பொற்றுஅல் ஊமை வியஞ்சனமெய்”
“இரேகை வரிபொறி எழுத்தின் பெயரே”
“இரேகை வரிபொறி இலேகையக் கரப்பெயர்”

இவை மெய், எழுத்து இவற்றின் பிற பெயர்கள். இவ்வாறே முன்னதனினும் மிகையான வட சொற்களைக் கொண்டு பேரகத்தியம் இயல்கின்றது.

இரண்டு நூல்களிலும் 141 முதல் 164 முடிய உள்ள நூற்பாக்களைப் பக்கம் பக்கம் வைத்துப் பார்த்தால் முத்துவீரியரைப் பேரகத்தியப் புனைவாளர் முற்படத் தள்ளிவிடுதல் கண்கூடு. அன்றியும் அவர் சொல்லாத வடமொழி எதிர்மறை நிலை இலக்கணமும் பேரகத்தியப் பெரியவர் சொல்லுதலால் ‘ஐயப்படாது’ உணரக்காட்டிக் கொடுக்கிறார்,

“நிர் துர் நிகுவி பொருளின்மை நிகழ்த்தும்”

என்பது முதல்,

“ஆ ஐ ஔ முத லாகமந் திரிபாம்”

என்பது இறுதியாக வரும் நான்கு நூற்பாக்களையும் (161-164) காண்க.

இனி உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டியுள்ள அகத்தியச் சூத்திரங்களும் தாம் எத்தகையவை என்பதை அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி உரைக்கிறார்:

“அகத்தியர் பெயரால் அகத்தியம் என்னும் நூலைப் புனைந்தெழுதி வழங்கி வந்தார்கள் என்று கருதுவதற்கு இக்காலத்து வழங்கும் அகத்தியச் சூத்திரங்கள் இடந்தருகின்றன” என்று ‘கன்னித் தென்கரை’ என்னும் நூற்பாவை எடுத்துக் காட்டி விளக்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/76&oldid=1471380" இலிருந்து மீள்விக்கப்பட்டது