பக்கம்:இலக்கண வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

4. தொல்காப்பியம்


முந்து நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம் “தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி” என்று தெளிவாகக் கூறுகிறது. இதனை முன்னரே அறிந்துளோம்.

தொல்காப்பியம் ‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’ என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும், ‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப்பட்டது’ என்னும் கருத்தால், “பழைய காப்பியக்குடியில் உள்ளான்” என நச்சினார்க்கினியர் கூறினார்.

பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு ‘விருத்த காவ்யக்குடி’ என்பதொரு வடநாட்டுக்குடி என்றும், பிருரு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக்குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/79&oldid=1471386" இலிருந்து மீள்விக்கப்பட்டது