பக்கம்:இலக்கண வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கார்.

காமத்தைப் புறைதீர்காமம் என்றும் (1027) காமப் பகுதி கடவுளும் வரையார் என்றும் (1029) கூறார்.

“ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
தேனது வாகும்”

என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதிகாரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் நரிவிருத்தத்தையும் கருதுதல்வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக.

கடவுள் நம்பிக்கை :

தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனிலும்

“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”

என்றும் (1034), புறநிலை வாழ்த்து ,

 “வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின்”

என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே’ என உணவுக்கு முற்படத் தெய்வத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/89&oldid=1465580" இலிருந்து மீள்விக்கப்பட்டது