பக்கம்:இலக்கியக் கலை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைகளில் சிறந்தது இலக்கியக் கலை 85 அடித்துக்கொண்டு எழுந்தது தெரியுமா? கதிரவன் ஏன் இத்துணைச் சிவந்த மேனியனாய்க் குணதிசையில் தோன்றுகிறான் தெரியுமா? இதோ விடை கூறுகிறான் கவிச்சக்கரவர்த்தி , "............ஏழையால் வண்டுதங்கிய தொங்கன் மார்பன் மயங்கி விம்மிய வாறெலாம் கண்டுகெஞ்சு கலங்கி அஞ்சிறை யான காமர் துணைக்கரம் கொண்டுதம்வயி றெற்றியெற்றி விளிப்ப போன்றன கோழியே’ ," - - : - (கை. சூழ்வினை : 47) :பாபமுற்றிய பேதை செய்த பகைத்தி றத்தினில் வெய்யவன் கோபமுற்றி மிகச்சி வந்தனன் ஒத்தனன் குணக் குன்றிலே, * . . . . . . - (ஷை :49) என்றுமே சிவந்து தோன்றுங் கதிரவன் அன்று மிகச்சிவந்து காணப்படுகிறான் கவிஞன் கற்பனையில். என்றுமே சிறகடித்து எழும் கோழி அன்று துயரந் தாங்கமாட்டாமல் அடித்துக் கொள் வதாகத் தெரிகிறது. இவை போன்ற உதாரணங்களால் முற்கூறிய உண்மை நன்கு புலனாகும், இயற்கையும் கவிஞன் மனத்தில் தோற்றுவிக்கும் காட்சியையே கவிதை பேசுகிறது. இலக்கியத்தில் தான் கலைஞன், மிகுந்த சுதந்திரத்தோடு வேலை செய்கிறான். இசையைப் போலவே இங்குப் பயன்படும் கருவி உயிரற்ற ஒலிக் கூட்டமன்று. ஒவ்வொரு சொல்லும் பொருளை யுடையது. உயிரோடிருந்து தொழிற்படும் மக்களைப் பற்றித் கூறுவது கவிதையாகவின் கவிதையிற் பயன்படும் சொற்கள் எல்லாம் அம் மக்களின் உணர்வு பேச்சு முதலாயின வற்றைக் குறிப்பனவாகவே உள. அதனாலேயே கவிதை முழு அனுபவமே வடிவாய் அமைந்த தென்றும் நுண்கலைகள் எல்லா வற்றுள்ளும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. 1. But the word art has the same core of meaning in all its contexts it is always skill definitely and delibarately designed to prodduce an intended result - —L. Abercrombie P. of L. Criticism P. 21 1. Form. 2. Creative Power 1. ğl(I56um &#ü), (38%mğ,5ğlıb13] : 2. 1. Science. 1. Mind. 2. Fine Arts. 3. Time Arts. 4. Space Arts. 5. Three dimensions 1. Creation. 2. Form 1. Content 1. Economy 2. libeal Self. 16 இரகுவம்சம், கடவுள் வாழ்த்து - - - 17. திருவிளையாடல், இடைக்கர்டல்......படலம் 10 18. Harmony 19. Full personality - 20, Nature is treated only as the reflex of man's sprit.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/104&oldid=750908" இலிருந்து மீள்விக்கப்பட்டது