பக்கம்:இலக்கியக் கலை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 9 இலக்கியமும் வாழ்க்கையும் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு இருந்து வருகிறது. இலக்கியம் மக்கள் வாழ்க்கையில் மலர்கிறது. உண்மையில் இலக்கியத்தின் பாடுபொருளாக அமைவது வாழ்க்கையே. வாழ்க்கை, இலக்கியத்திற்குத் தேவை யான பாடுபொருளைத் தருகிறது. அதன்மீது, ஒரு கலைவடிவத்தை இலக்கியம் திணிக்கிறது. வாழ்க்கை அனுபவம் எழுத்தாளனுடைய வாழ்க்கை அனுபவத்தைப் பிறருக்குத் டுதரிவிக்கும் கலைப்படைப்பே இலக்கியம் என்பதை நாம் முன்னரே க்ண்டோம். ஆனால், இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இன்டயே உள்ள தொடர்பு புறத்தே புலப்படுவது போன்று, அத் துணை எளிமை வாய்ந்ததாகத் தோன்றவில்லை. இந்தச் சிக்கலைப் பற்றி உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் சிலர் மிகநுட்ப மாக ஆராய்ந்துள்ளனர். ஆனால், சில சமயங்களில் அவர்களுடைய கருத்துகள் முரண்பாடுடையனவாகவே தோன்றுகின்றன. இப்பகுதி யில், வாழ்க்கையும் இலக்கியமும் பற்றிய பல்வேறு கொள்கை களைக் காலவரன்முறையில், முதலில் காண்போம். பின்னர்க் கருத்துத் தொடர்பின் அடிப்படையில், அவற்றைத் தெள்கை வகைப்படுத்தித் தமிழிலக்கியக் கோட்பாடுகளைப் பொருத்தி, அவற்றின் நோக்கையும் பேர்க்கையும் அறிய முயலுவோமாக. போன்மை இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய சிக்கலை முதன்முதலில் ஆழ்ந்து சிந்தித்து, ஆராய்ந்தவர் கிரேக்கநாட்டு மெய்ப்பொருள் அறிஞரான பிளேட்டோ (கி.மு. 428-847) ஆவார். அவருடைய கலந்துரை யாடல்களில் எல்லாம், பெரிதும் கவிதையைப் பற்றியே பிளேட்டோ ஆய்வு செய்துள்ளார். கவிதையைப் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துகளை முழுமையாக இலக்கியத்திற்குப் பொருத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/105&oldid=750909" இலிருந்து மீள்விக்கப்பட்டது