பக்கம்:இலக்கியக் கலை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இலக்கியக்கலை தொரு வகையாகப் பொலிவுறும். இதனால், ஒருபொருள் குட்டை யாகவும், நெட்டையாகவும் வளைந்தும் உள்ளதைப்போலத் தெரியும். அதாவது, ஒரு பொருள் இயல்பாக உள்ளதைப்போன்று தோற்றம் தராமல், திரிபுக் காட்சியை’-திரிந்த காட்சியைத்தரும். 'இதைப்போன்றே கருத்துகளும், கவிதை வடிவிலே வெளிப் படும் பொழுது உருமாறிவிடுகின்றன. இந்த உருமாற்றத்தால், பல ஏமாற்றத்தோற்றங்கள் கவிதையில் இடம் பெறுகின்றன. எனவே கவிதை என்பது சொற்களும் ஒலிநயமும் சேர்ந்து செய்யும் மாயவித்தை-கண்கட்டுவித்தை" என்று கவிதையின் போன்மைத் தன்மையைப் பலவாறாகப் பிளேட்டோ விளக்கியுள்ளார். "பொருள்களைப்பற்றிய கருத்திலேயே உண்மையான மெய்ம்மை (Reality)ப் பண்பு பொருந்தி இருக்கிறது. எனவே உலகில் உள்ள தனிப்பொருள்கள் யாவும், வெறும் பிரதிபலிப்புகள் அல்லது போன்மைப் படைப்புகளாகும். எனவே, அப்பொருள்களில் யாதாகிலும் ஒன்றைப் பார்த்து அதைப்போல மற்றொரு பொருளைப் படைப்பானாகில், அப்பொருள், போன்மையிலும் போன்மையாக அமையும். அதனால் அவர்கள் படைக்கும் பொருள், முடிவான மெய்ம்மையினில் இருந்து மேலும் விலகி அல்லது திரிந்துவிட்ட கலைப்படைப்பாகும்" என்பது பிளேட் டோவின் அடிப்படைக் கோட்பாட்ாகும். - - உண்மையான மெய்ம்மையைக் காண்பதே, தத்துவ ஞானி யின் நோக்கமாகும். இந்த நோக்குநிலையில், ஓவியக் கலைஞனின் செயலை நோக்குவோனால், பயனுடைய பணியை ஒவியன் செய்யவில்லை என்பது புலனாகும். இதனால், தான் கண்டதை அப்படியே, படி எடுப்பதைத் தவிர வேறு எத்தகைய சிறந்த செயலையும், பயனுடைய செயலையும் ஒவியன் செய்யவில்லை. இதனால் புதியதாக ஒன்றைப்படைக்கும் ஆற்றலோ, அதைப் பயன்படுத்தும் திறனோ அவனுக்கு இல்லை என்பது போதருகிறது. ஒருகட்டிலை அவனால் வரைய முடியுமே-ஒவியம் திட்ட இயலுமே ஒழிய அதனைப் புதியதாகப் படைக்க இயலாது. " . . . . . . . " இதைப்போன்றே, கவிஞனும், மெய்ம்மையைப் புரிந்து கொள்ளவேண்டியமுறையில் அறிந்துகொள்ளாமலும் புதியதாகப் படைக்க இயலாமலும், கண்மூடித்தனமாகச் சொற்களின் மூலம் அதைப் படி எடுக்கின்றான். . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/107&oldid=750911" இலிருந்து மீள்விக்கப்பட்டது