பக்கம்:இலக்கியக் கலை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் வாழ்க்கையும் $9. எனவே, கவிதை அல்லது இலக்கியம் என்பது போலிக்குப் போலியாக அமையும் ஒரு வகைக் கலைப் படைப்பேயாகும். இதனால் கவிதை என்பது மெய்ம்மையில் இருந்து மும்மடங்கு விலகிவிட்ட போலிப் பொருளாகவே அமைகிறது. - இப்பின்னணியில் கலைஞன் என்பவன், மெய்ம்மையை விட்டு விட்டுப்போலியாக உள்ள ஒருபொருளைப் படி எடுப்பவனாகவே தோன்றுகிறான். அதே சமயத்தில், அவன் படி எடுக்கும் மூலப் பொருளின் உண்மை இயல்புகளையோ, பயன்பாட்டையோ அறியாத அறிவிலியாகக் காட்சி தருகிறான்' என்பது பிளேட்டோ வின் இலக்கியக்கொள்கையாகும்." . இந்த முறையில், இலக்கியம் வாழ்க்கையின் மெய்ம்மையை அப்பட்டம்ாகப் புலப்படுத்தாமல். எடுத்துரைக்காமல் - வாழ்க்கை யினைப் படி எடுக்க முயலுகிறது. எனவே உண்மை வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பது இல்லை. கலைநயம், கற்பனைவளத்தில் சிக்குண்டு, வாழ்க்கையைப் பற்றிய ஒரு மாயத்தோற்றத்தையே அது சித்திரிக்கிறது. * . . - . . பிளேட்டோவின் சிந்தனையில், வெளிப்படையாகவே தவறு ஒன்று தோன்றுகிறது. பேரளவிற்குத் தத்துவஞானியர்கவும், அறவோராகவும் இருந்தமையால், இலக்கியத்திற்கும் வாழ்க்கைக் கும் இடையே உள்ள தொடர்பினைத் தெளிவாகக் காண்பதற்குப் பிளேட்டோவால் இயலவில்லை. கலைப் படைப்பு ஒன்று உணர்த்தும் அல்லது தெரிவிக்கும் மெய்ம்மை, முழுமையானது அன்று என்னும் அவருடைய கருத்து ஓரளவுக்கு உண்மையாகும். ஒவியனோ, கலைஞனோ படைக்கும், படைப்புகள் எல்லாம் இத் தகைய இயல்புடையன் என்ப்தும் உண்ண்ம். ஆன்ால் க்லைஞன் மெய்ம்மையை முழுமையாகப் படைக்கவில்லை என்பதோடு அவ்ர் நின்று விடுகிறார். மெய்ம்மைக்கு மேம்பட்ட ஒரு நிலைண்யயும் கலைஞன், தன்படைப்புகளில் உருவாக்கித் தருகிறான் எனும் உண்மையை அவரால் புரிந்து கொள்ள இயலவில்ல்ை. - - இந்தக் குறைபாட்டைப் பிளேட்டிோவின் அருமை மாணவர் அரிஸ்டாடில் முதன்முதல் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு சுட்டிக்காட்டுவதோடு அமையாமல், தம்:குருநாதரின் சிந்தனையில் :படிந்த களங்கத்ை தயும் அவர் களைந்துள்ளார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/108&oldid=750912" இலிருந்து மீள்விக்கப்பட்டது