பக்கம்:இலக்கியக் கலை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் வாழ்க்கையும் 9í அறிவுக்குத் தொடக்க வாயிலாக அமைவதும் இப் போன்மைப் பண்புதான். இப்படிப் பார்த்துச் செய்யப்படும் கலைகளைக்கண்டு, மகிழ்வதும் மனிதனுக்கே உரிய சிறப்பியல்பாக உள்ளது. நேராகக் காணும்போது அருவருக்கத் தக்கனவாகத் தோன்றும் சில இழிந்த விலங்குகள், பிணம் போன்றவைகூட ஓவியமாக வரையப்பட்டால், பார்த்து மகிழத்தக்கனவாக அமைகின்றன. இம்மகிழ்ச்சி, அவற்றைக் காண்பதால் உண்டாவது அன்று; பார்த்துப் படைக்கும் கலைஞனின் போன்மைத்திறம்தான் காண்போரை மகிழச் செய்கிறது." இந்தப் பகுதியைக் கூர்ந்து நோக்கினால் படைப்பாளனுடைய போன்மைப் பண்பு தற்சார்பற்ற நிலையில் அமைவது எனும் கருத்து இலைமறை காய்போல் இனிது விளங்குகிறது. அதாவது இலக்கியத்தில் தீட்டப்படும் வாழ்க்கை, தற்சtர்பற்ற முறையில் போன்மைப்பண்பால் புலப்படுத்தப்படுவதாகும். வேறுவகையாகச் சொல்லுவதானால், க்ற்பனை த் திறன்ால், வாழ்க்கையில் மறுபடைப்பாக விளங்குவதே இலக்கியம் எனலாம். இதனால்தான் நடைமுறை உலகில் அருவருக்கத்தக்க விலங்குகளும், பிணங்களும் கன்லப்படைப்பின் கவர்ச்சி வாய்ந்தனவாகவும் இன்பம் நல்குவன வாகவும் அமைகின்றன என்பதை அவர் தெரிவித்துள்ளார். இந்த முறையில் தலைப்படைப்புகள் மெய்ம்மையான்வைய்ே என்பதை நிலைநாட்ட அவர் முயலுகிறார்; . பிளேட்டோ காட்டியதைபோல அவை பொய்ம்மையானவை அல்ல என்பதையும் தம்முடைய விளக்கத்தில் அரிஸ்டாடில் தெளி வுறுத்தியுள்ளார். இலக்கியத்தில் வாழ்க்கை மெய்ம்மையின்படியே கவிதை' எனும் பிளேட்டோவின் கருத்தை, இந்த அளவிற்கு அரிஸ்டாடில் உடன்படுகிறார். ஆனால் இலக்கியத்தில் வாழ்க்கை தற்சார்பற்ற முறையிலேயே படம்பிடித்துக் காட்டப்படுகிறது என்பது இவருடைய அசைக்க முடியாத கொள்கை. வாழ்க்கையைக் கற்பனைத் திறத்தால், மறுபடைப்பு செய்து தருவதே கவிதை என்பதையும் அடுத்து இவர் விளக்கியுள்ளார். வாழ்க்கையைப் படி எடுத்துக்காட்டுவது அல்லது படம் பிடித்துக் காட்டும் கலைதான் இலக்கியும் ன்னும் பொழுது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/110&oldid=750915" இலிருந்து மீள்விக்கப்பட்டது