பக்கம்:இலக்கியக் கலை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் வாழ்க்கையும் 97 படுத்தப்பட்டது. தனிமனிதரின் வழக்கங்களை ஒரு சமுதாயத் தின் சிறப்பு இயல்பாகக் கருதும் நிலை உண்டான பொழுது, அதன்ை உலகியல் வழக்கு எனச் சுட்டலாயினர். இந்தப் பின்னணி யில், தொல்காப்பியர் குறிப்பிடும் உலகியல் வழக்கையும் நாடக வழக்கையும் புலனெறி வழக்கையும் புரிந்துகொள்ள முயல வேண்டும். - w 'நாடகவழக்கம்’ என்பதைப் புனைந்துரை வகைப்பட்ட வழக்கம் என்று நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார்: புனைந் துரை - இல்லாத ஒன்றை இட்டுக்கட்டிச் சொல்லுதலாகும். எனவே, புனைந்துரை என்பது இக்காலத்தில் பெருவழக்கில் உள்ள கற்பனை’ எனும் சொல்லின் பொருள் பயப்பதாக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. '. . இதன் பொருளைத் தெளிவுபடுத்தும் முறையில், இளம் பூரணரின் உரை விளக்கம் அமைந்து இருக்கிறது. 'நாடக வழக்கா வது சுவைபட வருவனவெல்லாம் ஒரிடத்து வந்தனவாகத் தொகுத்துக்கூறுதல்' என்று அவர் தந்துள்ள விளக்கம், நாடக வழக்கு'என்பது அவர் கற்பனையாகப் படைத்துக் கூறும் வழக்கம் எனும் கருத்தினைத் தெரிவிக்கிறது. அடுத்து உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது உலகியல் வழக்கு' என்று இளம்பூரணர் அறிவிக்கிறார். ' அதாவது ‘உலக இயல்பிற்குப் பொருந்திவரும் உண்மையாக நிகழும் வழக்கமே உலகியல் வழக்கமாகக் கருதப்படுகிறது. இவை இரண்டிலும் இருந்து வேறுபட்டது புலனெறி வழக்கம்' என்பது தொல்காப்பிய நூற்பாவின் கருத்து அமைதியே புலப் படுத்துகிறது. இதனைப் பேராசிரியர் எனும் தொல்காப்பிய உரையாசிரியர் மரபியலில் தெளிவுறுத்தி உள்ளமை இங்கு நினைவு கூர்தற்குரியது. , ' ' ' ' ' o உலகியல் வழக்காகிய மெய்ம்மையும் நாடக வழக்காகிய கற்பனையும். கலந்ததே புலனெறி வழக்கம்’ என்பதை இளம்பூரணர் குறிப்பாகத் தெரிவித்துள்ளார். - புலனெறி வழக்கம்' என்பதனைப் புலவரால் பாடுதற்கு அமைந்த புலவராற்று வழக்கம்" என்று நச்சினார்க்கினியர் தெளிவுறுத்தியுள்ளார். இங்குச் சுட்டப்படும் புலவராற்று வழக்கம் என்பதையே மேற்கு நாட்டு அறிஞர்கள் இலக்கிய வழக்கு எனப் போற்றுகின்றனர். இ. –7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/115&oldid=750920" இலிருந்து மீள்விக்கப்பட்டது