பக்கம்:இலக்கியக் கலை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - . இலக்கியக் ፵፭ Gö}q¥} 'புனைந்துரைத் (கற்பனையாகக்கூறு)தல், நாடக வழக்கு: எனில் அதில் உண்மைக்கு-மெய்ம்மைக்கு இடமே கிடையாதா? எனும் ஐயம் எழலாம். இத்தகைய ஐயத்தைப் போக்க நச்சினார்க் கினியர் முயன்றுள்ளார். x 'புனைந்துரையாற் கூறுப என்றலில் புலவர் இல்லனவுங் கூறுபராலோ எனின், உலகத்தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க்கு உள்ளனவற்றை ஒழிந்தோர் அறிக்தொழுகுதல் அறமெனக்கருதி அன்னோர்க்கு உள்ளனவற்றை ஒழிந்தோர் அறிந்தொழுகுதல் அறமெனக் கருதி, அந் நல்லோர்க்கு உள்ளனவற்றில் சிறிது இல்லனவும் கூறுதல் அன்றி, யாண்டும், எஞ்ஞான்றும் இல்லன கூறார் என்றற்கன்றே நாடகம் என்னாது வழக்கு என்பார் ஆயிற்றென்பது' என்று நச்சினார்க்கினியர் அறிவுறுத்தியுள்ளார். பண்டைத்தமிழர் இலக்கியம் படைக்கப்படும் முறைகளைப் பற்றி நன்கு அறிந்து இருந்தனர் என்பதற்குத் தொல்காப்பிய னாரின் நாடக வழக்கிலும் எனத் தொடங்கும் நூற்பாவே போதிய சான்றாகும். . உலகியல் வழக்கு மிகுதியாக இடம் பெறுவதே இலக்கியத் திற்குச் சிறப்பு அளிக்கும் என்று நச்சினார்க்கினியர் கருதியுள்ளார் ..இவ்விரண்டினும் (நாடக வழக்கு, உலகியல் வழக்கு), உலகியல் சிறத்தல் (மிகுந்து வருதல்) உயர்ந்தோர் கிளவி (217) என்னு: பொருளியல் சூத்திரத்தாலும் மரபியலானும் பெறும்" என கூறுவதோடு, உலகிலேயே முதன்மை இடம் பெற்றுள்ள, பின்வரு குறுந்தொகைப் பாடலை, அவர் எடுத்துக்காட்டாகக் காட் யுள்ளார். சமுளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத். தர்ன்துழந்து அட்ட் தீம்புளிப்பாகர் இனிது எனக் கணவன் உண்டலின்: நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒனணுதல் முகனே" (குறுத் 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/116&oldid=750921" இலிருந்து மீள்விக்கப்பட்டது