பக்கம்:இலக்கியக் கலை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் வாழ்க்கையும் - 99 இப் பாடலில் புதுமணமக்களின் இனிய இல்வாழ்க்கை, சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. உலகியலுக்குப் பொருந்தாத புனைந்துரை கற்பனை இப்பாடலில் காணப்பெற வில்லை. கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇ என்பதனை இன்றைய நடப்புலகில் காணலாம். தன்னைப் பாராட்டும் பொழுது, நல்ல பெண்மணி வாய்விட்டுச் சிரிக்க மாட்டாள்; புன்னகைதான் புரிவாள். ஆனால், கணவனே பாராட்டுகின்ற பொழுது, மகிழ்ச்சி உண்டாகிறது; மகிழ்ச்சிப் புன்னகை-பூக்கிறாள். இதனை நுண்ணிதின் மகிழ்ந்தாள் எனக்கவிஞன் தெரிவிக்கிறான். 'இனிது எனக் கணவன் உண்டான்' எனப் பாடுவதில்தான் உலகியல் முழு நிறைவுடையதாகத் தோன்றுகிறது. உண்மையாக அன்புடைய கணவன்மார், எப்பொழுதும் புகழ்ந்து பாராட்டுவது இல்லை; குறிப்பாகத் தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்துவர். 'நல்லது நன்றாக இருக்கிறது. என்பனவே அப்பாராட்டுரையாகும். சங்க காலத்திய கணவனும் இதே இக்கர்ல இயல்புடைய மனிதனாகத்தான் இருந்திருக்கிறான் என்பதனை இப்பர்டல் அறிவுறுத்துகிறது. உலகியலையே மையமாகக் கொண்ட இப்பாடல், இனிக்கும் பாடலாக அமையக் காரணம் யாது? எனும் எண்ணம் எழலாம். இன்ப அன்பின் எக்களிப்பை, கலையுணர்வு பெருகுமாறு, கவிஞன் சிறந்த சொற்களை, சிறந்த இடங்களில், சிறந்த முறையில் அடுக்கி அழகோவியமாகப் படைத்துள்ளான். இனி நாடகவழக்கும், உலகியல் வழக்கும் கலந்துள்ள புலனெறி வழக்கத்திற்கு நச்சினார்க்கினியர் காட்டியுள்ள சான்றினைக் காண்போம். 'மனைகெடு வயலை வேழம் சுற்றும் துறைகேழ் உள்ரன் கொடுமை நாணி கல்லன்' என்னும் யாமே! "அல்லன்' என்னும்என் தடமென் தோளே" (ஐங்குறு, 11) இப்பாடலில் முதல் (மருதநிலம்), கரு (வயலை : மனை), உரி (கொடுமை ஒழுக்கம்-பரத்தைப் பிரிவு) எனும் மூன்றும் கூறப் படுதல் நாடக வழக்கு என்பர். கருப்பொருளைப் பற்றிய தொல்காப்பியரின் கருத்துகள் வாழ்க்கை இயல்புகளை இலக்கி யத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெளிவுறுத்து இன்றன, х -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/117&oldid=750922" இலிருந்து மீள்விக்கப்பட்டது