பக்கம்:இலக்கியக் கலை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i00 *- இலக்கியக் கலை நச்சினர்ர்க்கினியர் தலைவனுடைய கொடிய செயலை . தவறான ஒழுக்கத்தைத் தலைவி பழித்தல் உலக வழக்காகும். மானக்கேடான செயலாயிற்றே என நினைந்து, நான் அவர் நல்லவர் எனவே சொல்லுகிறேன். ஆனால், அவருடைய பிரிவால் வாடும் என்னுடைய தோள்கள் மெலிவுறுவதன் மூலம் அவர் நல்லவர் அல்லர் எனப் பறைசாற்றுகின்றன எனும் கருத்து நாடக வழக்கிற்கு உரியதாகும். தோள்கள் பறை சாற்றுகின்றன. என்பது புனைந்துரை வகையால், உணர்த்தப்படும் உண்மை, நினைத்து நினைந்து மகிழ்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒர் இலக்கியக் கலைத்திறன். ‘. . இவ்வாறு நாடகவழக்கும், உலகியல் வழக்கும் கூடி வருதலே பாடலுள் பயின்ற புலனெறி வழக்கமாகும் என்பது நச்சினார்க் கினியரின் கருத்தாகும். - இவற்றிலிருந்து இலக்கியப்படைப்பில், மெய்ம்மையும், கற்பனையும் கலந்து வருவதே சாலச்சிறந்தது எனும் பண்டைத் தமிழ்ச் சான்றோரின் இலக்கியக்கொள்கை எளிதில் பலனாகிறது. வாழ்க்கையை ஒட்டியனவற்றையே மிகுதியாகப் படைத்துத் தருதல் 'உள்ளது புனைதல் எனவும் வாழ்க்கையில் பயிலாதவற்றை மிகுதியாகக் கற்பனை செய்து தருதல், இல்லது புனைதல்' எனவும் நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். * * * ஒர் இலக்கியப்படைப்பு முழுமையும் உள்ளது புனைதல்' எனும் படைப்புக் கோட்பாட்டு அடிப்படையில், ஆக்கப்பட்டு இருக்கு மானால், அது கலைப்படைப்பாக அமைவதில்லை. அல்லது முழுமையும் இல்லது புனைதல் நெறியினைப்பின்பற்றிப்படைக்கப் படுமானால், அது கலைப்படைப்பு' எனும்,சிறப்பினைப் பெறுவதும் இல்லை. முன்னதில் உயர்ந்ததை எட்டிப்பிடிக்கும் முயற்சி இல்லை. பின்னதில், வாழ்க்கையோடு இயைத்துக்காட்டும், ஆர்வம் இல்லை. எனவே, அவ்விருவகைப் படைப்புகளும் சுவை யற்றனவாகப் போய்விடுகின்றன. இந்த உண்மையை நன்குணர்ந்து இருந்த நம் முன் னேர்ர்கள் உள்ளது புனைதலாகிய மெய்ம்மை (உலகியல்) நாட்டத்தோடு, இல்லது பு ைன த லா கி ய நாட்கப் பாங்கை (நாடகவழக்கை)யும் ஒன்றாக இணைத்துப் புதியதோர் இலக்கியப் படைப்புக் கொள்கையை உருவாக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/118&oldid=750923" இலிருந்து மீள்விக்கப்பட்டது