பக்கம்:இலக்கியக் கலை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் வாழ்க்கையும் 101 கொண்டனர். அக் கொள்கையே புலனெறி வழக்கின் மூலம் வெளிப்படுவதாகும் இவை இரண்டு வழிக்கினின்றும் எவ்வளவு எடுத்துக்கொண்டு புதுவது புனைய வேண்டும் என்ற அளவீட்டைக் கலைஞன் தன் அறிவின் துணைகொண்டு (புலன்) கணிக்கிறான் ஆகலினாலும் இல்லது படைப்பது புலனெறி வழக்காயிற்று. பண்டைத் தமிழருடைய இந்தச் சிந்தனையில் இருந்து வேறு படுகிறார், பரதநாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரதமுனிவர், உலகியல் வழக்கை உலகதருமம் (லோகதர்மீ) எனவும் நாடக வழக்கினை நாடகதருமம் (நாட்யதர்மீ) எனவும் சுட்டியுள்ளார்." ஆனால், இவை இரண்டும் அளவாகக் கலந்த புலனெறி வழக்கி'னைப் பற்றிய சிந்தனை அவர்பால் உருவாகவில்லை. இரு இயல்புகளையும் ஒன்றிணைத்துப் படைப்பத்ால் கலைப்படைப்புகள் வலிவும் வனப்பும் பெறுகின்றன. . - தான் கண்டனவற்றையும் அறிந்தனவற்றையும் பயிலறிவின் வாயிலாக எவ்வாறு உணர்கிறானேர், அவ்வாறு-அதாவது அவன் உணர்ந்தவாறு கவிஞன் எடுத்துரைக்க முயலுகிறான். அப்பொழுது 'உலகப் பொதுமைகளை மெய்ம்மைய நோக்கில், கற்பனை வண்ணத்தில் குழைத்துத் தருகிறான் எனும் அரிஸ்டாடிலின் கவிதைக் கொள்கை நம் தமிழ்ச் சான்றோர்களின் இலக்கியக் கொள்கையோடு பெரிதும் ஒத்துள்ளமையை அறியலாம். பிற்கால ஐரோப்பியச் சிந்தனையாளர்களுள் பலர், இத்தகைய எண்ணப்போக்கு உடையவர்களாகவே, உள்ளனர். ஆனால் அவர் களுடைய அணுகும் முறைகள்ே வேறுபடுகின்றன. வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் இடையே உள்ள தொடர் பினைப்பற்றி ஆராய்ந்த அண்மைக்கால அறிஞர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சர்-பிலிப் சிட்னி (Sir Philip Sydney) என்ப வராவர். பிளேட்டோவின் இலக்கியம்பற்றிய குற்றச்சாட்டு பொருத்திமற்றது என்பதை நிறுவ, அவர் அரும்பாடு பட்டுள்ளார். எப்பொழுதோ நடைபெறுபவை, (Casual actualities) என்னும் கருத்தினைப் புறக்கணித்துவிட்டு, அடிப்படையில் நிகழத்தக்கன (Fundamental Probabilities) grgjih 505$@sogar smlouvudfranš கொண்டு வரலாற்று ஆசிரியனைவிடக் கவிஞன் மெய்ம்மையை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/119&oldid=750924" இலிருந்து மீள்விக்கப்பட்டது