பக்கம்:இலக்கியக் கலை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

മു வாழ்க்கையும் 108 செய்ய முயலுகிறான் ' எனும் சித்தாந்தத்தைச் சிட்னி தெளிவுறுத்தியுள்ளார். 'மனித இயற்கையின் படிமத்தையே, கற்பனை இலக்கியம் படைத்துத் தருகிறது' என்பது இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பினை ஆராய்ந்த டிரைடன் (Dryden) எனும் திறனாய்வாளரின் கருத்தாகும். அவர்கள் எதைப்போல் "இருக்கிறார்கள்?' என்பதைத் தெரிவிக்கும் வகையில் மனிதர்கள் சிெயல்படுவதையே, இலக்கியம் சித்திரிக்கிறது. மனித இயற்கை யைப்பற்றிய உண்மைக்கும்', 'மனித இயற்கையின் படிமத் திற்கும்”இடையே எத்தகைய வேறுபாடும் இருப்பதாக இவர் கருத வில்லை. படிமம் நேர்மையானதாக - பொருத்தமானதாக - இருக்குமானால், தானாகவே அது மனித இயற்கையின் உண்மை நிலையைப் புலப்படுத்தும் என டிரைடன் அறிவிக்கிறார். படிமம் பொருத்தம்ானதாக மட்டும் இருந்தால் போதாது. இன்புறுத்து வதாகவும் அமைய வேண்டும். மனிதனின் புலன் உணர்வுகளையும் நகைச்சுவையுணர்வையும் படம்பிடித்துக் காட்டுவதன்மூலம், மனித இயற்கையைப் பொருத்தமாகவும், இனிமையாகவும் புலப்படுத்தும் படிமங்களைக் கவிஞன் பெறுகிறான். இதனை, மனிதன் அனுப விக்கும் இன்ப துன்பங்களைக் கொண்டு தெரிவிக்கலாம் என்பது டிரைடனின் கருத்தாகும். " இன்பதுன்பங்களின் பாதிப்புக்கு ஏற்ப, ஒரு ப்ாத்திரம் எவ்வாறு எதிர்ச்செயலில் ஈடுபடுகிறதோ அப்பொழுதுதான் அவனுடைய வெறித்தனத்தையும் நகைச்சுவை உணர்வையும் நாம் அறியமுடியும் என்று அவர் கூறுகிறார். கண்ணகியின் வரலாற்றை எடுத்துக்கொள்ளுவோம். பேசா மடந்தையர்ன கண்ணகி, கோவலன் அநியாயமாகப் பழிசுமத்தப் பட்டுக் கொலை செய்யப்பட்டான் எனும் அதிர்ச்சி மிகு செய்தியை அறிந்த பிறகு, அவள் ஒரு வீராங்கனையாக மாறிவிட்டதைக் காணுகிறோம். எல்லை கடந்து துன்புத்தர்ல் தாக்கப்பட்ட அவள், சீற்றமிக்க பெண்மணியர்க மாறிவிடுகிறாள்; மற்றும் பழிக்குப் பழிவாங்க உறுதி பூண்டு செயல்படுகிறாள். இது எதைக் காட்டுகிறது? ་ས་ལ་བ ད་ ་ བ ་ ེ ་ བ ཟ ོ ད ་ པ ་ ་ ་ ་ ་ ་ ལ་ ་ இன்பக்களிப்பில் மிதந்தபொழுது இன்புறு பதுமையாக விளங்கினாள் கண்ணகி. கணவனுடைய பிரிவு எனும் துன்பம் அலைக்கழித்தபெ ழுது, துன்பத்தைத் தாங்கும் இதய்த்தோடும் இன்று ou-protrf ஆயினும் நாளை வருவார். எனும் நம்பிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/121&oldid=750927" இலிருந்து மீள்விக்கப்பட்டது