பக்கம்:இலக்கியக் கலை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இலக்கியக் கலை யோடும் பொய்யான புன்முறுவலோடு காலத்தைக் கழித்தாள். ஆனால், பொறுத்தற்கு இயலாத துன்பத்தால் தாக்குண்ட பொழுது பொங்கி எழுந்தாள் பொய்யும் வழுவும் நிறைந்த இந்தச் சமுதாயத்தை மாற்றுவதற்கும் திருத்துவதற்கும் இயலாத நிலையில், காய்கதிர்ச் செல்வன்ை உதவிக்கு அழைக்கும் நிலையை அடைகிறாள். மதுரையைத் தீக்கடவுளுக்கு இரையாக்கிய செயல், ஒருவகை வெறிச் ச்ெயலாகவே தோன்றும். ஆனால் இந்த நிலைக்கு அவளைப் பிடர்பிடித்துத் தள்ளியது எது? என்பதை ஆராய்ந்து அறிவோமானால் நம்பிக்கையற்ற நிலையில் துன்பத்தால் தாக்குண்ட ஒரு மனிதன் இயல்பாக எவ்வாறு செயல் படுவான் என்பதையே கண்ணகியினுடைய வீராவேசச் செயலின் வாயிலாக இளங்கோவடிகள் உணர்த்தியுள்ளார் என்பது புலனாகும். சோதனைகளும் வேதனைகளும்தான் மனிதனுடைய பண்பாட்டிற்கு ஒளியூட்டும் என்பர். இந்த நோக்கில் பார்க்கின்ற பொழுது சூழ்நிலைகளின் தாக்கத்தில் ஒரு மனிதனுடைய 'உண்மைவடிவம் வெளிப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. இந்த எண்ணப்போக்கையே, இனியமுறையிலும் ஏற்கத் தக்க வகையிலும். மனிதஇயல்பு எவ்வாறு இருந்துவருகிறது என்பதை படிப்போர்க்கு எடுத்துரைப்பதே இலக்கியத்தின் செயற்பாடாகும்' என்று டிரைடன் தெளிவுறுத்தியுள்ளார். . . . கம்பன்,தமிழுலகில் தோன்றிய கவிஞர்களுள் தலைசிறந்தவன் என்பது யாவரும் அறிந்த உண்மை. அவன் இயற்கையைப் பல்வேறு கோணங்களில் படம்பிடித்துக் காட்டியுள்ளதை போன்றே, பலதிறப்பட்ட மனித இயல்புகளையும் காணலும், காட்டவும் முயன்றுள்ளான். தன்னுடைய காப்பியத்தைப் பயில்வோருக்கு உலகியல் பாங்கையும், வாழ்க்கையையும், பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் தன்னுடைய இராமாயணத்தைத் தந்துள்ளான். குறிப்பிட்ட சில இடங்களில் வாழும் ம்க்க்ளுடைய பண்புகளைக் கொண்டு அவனுடைய பாத்திரங்களின் இயல்புகள் திரிக்கப்படவில்லை. பொதுநிலையில் இடத்தையும் சூழ்நிலையை உயும் கடந்த நிலையில் ஒரு மனிதன் அல்லது மனித இனம் செயற் :படும் முறையால் வெளிப்படும் பொதுமைப் பண்புகளையே, போத்திரங்களின் பண்புநலன்களாகக் கம்பன் கையாண்டுள்ளான். இவற்றால், பல்வகையான பாத்திர வார்ப்புகளையும் வேறுப்ட்ட பண்புநலன்களையும் கொண்ட மனிதர்களையும் கம்பனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/122&oldid=750928" இலிருந்து மீள்விக்கப்பட்டது