பக்கம்:இலக்கியக் கலை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் வாழ்க்கையும் foğ காதையில் நாம் கண்டு மகிழ்கிறோம். நாம் பெரிதும் விரும்பும் மனிதர்க்ளும் வெறுக்கும் மனிதர்களும் கம்பன் படைத்த பாத்திரங் களாக உள்ளனர். இதனால் புலப்படுவது யாது: ... * * மனித இயல்புகள் மாறவில்லை என்ப்தே புலனாகிறது. காலத்தாலோ, இடத்தாலோ, சிந்தனைப் போக்காலோ அடிப் படை மனித இயல்புகள் மாறவில்லை. புறத்தே எளிதில் வெளிப்படும் பழக்க வழக்கங்களை, அடிப்படையாகக் கொண்ட சிற்சில இயல்புகள் திரிந்துள்ளன. - - எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் பொருந்திவரக்கூடிய மனித இயல்புகளையே கவிதையில் கவிஞன் வெளியிடுகிறான். அவை அடிப்படையான மனிதப்பண்புகள், இதனால், இலக்கியத்தில் மனித இயல்புகள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன, எனவே, இந்த ஒளியூட்டுதல்’, வாழ்க்கையைப்படி' எடுப்பதால் உண்டாவது அன்று. , - அடுத்து வேர்ட்ஸ் வொர்த் (Words worth) தின் எண்ண வோட்டம் நம் சிந்தனைப் போக்கைத் தடைப்படுத்துகிறது. "ள்ல்லாவகையான எழுத்துரைகளைக் காட்டிலும் கவிதை, தத்துவப்பண்பு மிக்குடையது என்று அரிஸ்டாடில் கூறியிருப்பதாகச் சொல்லுகிறார்கள். அது அவ்வ்ாறானால், அதனுடைய நேர்க்கம் உண்மையாகத்தர்ன் இருக்க இயலும். அந்த உண்மை தனிமனிதச் சார்புடையதாகவேர் வட்டாரச் சார்புடிையதாகவோ இருக்க இயலாது. ஆனால், புறச்சார்புடைய சான்றாதாரங்களை அடிப் படையாகக் கொள்ளர்த பொதுநிலை உண்மையாகவும்', செயற் பாடுடைய நடைமுறை உண்மையாகவும் இருக்கும்; புலனுணர்வு க்ளால் உள்ளத்தில் பதிய வைக்கும் உயிர்த்துடிப்பு உடையதாக இருக்கும். மனிதன், இயற்கை ஆகிய இரண்டின் படிமமே கவின்த. வாழ்க்கை வரலாற்றையும், வரலாற்றையும் எழுதுவோருக்கு உண்மைவேட்கையில் நம்பிக்கையான உறுதி குறையுமாறு செய்யும் இடையூறுகள் அல்லது த்டைகள் மிகப்பலவாக்"உள்ளன. மற்றும் அவற்றின் பயன்பாட்டிற்கும் ஈடுஎண்ணற்ற இடையூறுகள் தோன்று கின்றன. இவை, கவிஞனுக்கு உண்டாகும் தடைகளையும், இடையூறுகளையும் விட பலமடங்கு அதிகமீர்கும். தம்முடைய கலையின் பெருமிதத்தை எளிதில் புரிந்துகொள்ளுமிர்று செய்யும் ஆற் றல் உடையவன் கவிஞன், அவன் ஒரேயொரு கட்டுப்பாட்டுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/123&oldid=750929" இலிருந்து மீள்விக்கப்பட்டது