பக்கம்:இலக்கியக் கலை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i06. இலக்கியக் கலை கவிதையைப் படைக்கிறான். மனிதன் எனும் முறையில் கவிஞனிட மிருந்து, படிப்போர் எதிர்பார்க்கும் இன்பத்தை, அக்கவிதைப் படைப்பில் இருந்து பெறுகின்றனர். இந்தக் கட்டுப்பாட்டைத் தவிர வேறு எத்தகைய பொருளும் கவிஞனுக்கும் பொருள்களின் படிமங்களுக்கும் இடையே தடையாக இருப்பதில்லை' எனும் வேட்ஸ்வொர்த்தினுடைய கருத்தினை அறிந்து தெளிவுபெற வேண்டியது நம்முடைய கடமையாகும். வேட்ஸ்வொர்த் உண்மை யைப் பற்றிக் கூறும் கருத்துகள் சிந்திக்கத்தக்கன. தனிமனித உண்மை வட்டாரச் சார்புடைய உண்மை என்பனவற்றுக்கும். பொதுநிலை உண்மை செயற்பாடுடைய நடைமுறை உண்மை என்பனவற்றுக்கும் இடையே நுட்பமான வேறுபாட்டை இவர் காட்டுகிறார் இந்த விளக்கம் அரிஸ்டாடில் தெளிவுறுத்திய 'வரலாற்று உண்மை', 'கவிதைச் சார்புடைய உண்மை என்பன வற்றோடு ஒத்துள்ளது. வேர்ட்ஸ்வொர்த்தின் கருத்துப்படி கவிதை உண்மை என்பது செயற்பாடுடைய நடைமுறை உண்மையாகும் அது நம் இடம் செயல்படுகிற பொழுது தன்னுடன் தன்னுடைய நம்பிக்கைகளை உடன் கொண்டு இயங்குகிறது. இதனால், நாம் அவற்றை ஏற்றுக் கெர்ள்ளுவதைக் தவிர வேறுவழி இல்லை. "தொகைமுகை இலங்கு எயிறாக நகுமே தோழி நறுந்தண் காரே' (குறுந்.221) எனும் அடிகளை நோக்குக. கார்கர்லம் சிரிக்கிறது' என்பதே கவிதைச் சார்புடைய உண்மை! கார்காலம் எப்படிச் சிரிக்கிறது? முல்லை அரும்புகளை வெண்மையாக விளங்கும் பற்களாகக் கொண்டு சிரிக்கிறது! நடைமுறை வாழ்வில், தம்முடைய வெண்மையான பற்கள் எல்லாம் தெரியுமாறு :வாயைத் திறந்து மனிதர்கள் சிரிப்பார்கள். இவ்வாறு சிரிப்பது ஏளனச் சிரிப்பாகும்! இந்த நடைமுறை உண்மையை, இயற்கைப் பொருளான அருவ நிலையில் உள்ள கார்காலத்திற்கு ஏற்றி, கருத்தைத் தெரிவிக்கும் நோக்கம் நம் உள்ளத்தில் செயல்படுமாறு (கவருமாறு) கவிஞன் செய்து விடுகிறான். . கார்காலம் உயிரற்ற வடிவம் அற்ற ஒரு பொருள். அதற்கு ശ്രമുണ്ട് முகைகளைப் பற்களாகச் சொல்லுவது நடைமுறைக்கு ஒவ்வாத வொன்று. ஆனர்ல் கவிதையில் இந்த இரண்டு உருவகங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/124&oldid=750930" இலிருந்து மீள்விக்கப்பட்டது