பக்கம்:இலக்கியக் கலை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் வாழ்க்கையும் 107 களாகிய படிவங்களும் இணைந்து மெய்போன்ற ஒருவகை மாயத் தோற்றத்தை உண்டாக்குகின்றன, இப்படிப்பட்ட மாயத்தோற்ற உணர்வை எழுப்புவதுதான் கவிதையில் இடம்பெறும் உண்மையின் செயற்பாடாகும். - - - தனிமனிதச் சார்புடைய உண்மையும், வட்டாரச் சார்புடைய உண்மையும் நமக்கு எனிதில் நம்பிக்கை ஊட்டுவன் அல்ல. வாழ்க்கை வரலாற்றிற்கும், வரலாற்றிற்கும் அடிப்படையாக அமைந்த ஆதாரங்களைச் சோதித்துப் பார்த்த பிறகே அவற்றை உண்மையென நாம் நம்பத் துணிகிறோம்; அல்லது எத்துணை அளவிற்கு அவற்றின் ஆசிரியர்கள் சான்றுகளைப் பின்பற்றிக் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர் என்பதைக் கண்டறிந்த பிறகே, அவற்றின் உண்மைபற்றி நம்பிக்கை கொள்கிறோம். கவிதைச்சார்புடைய உண்மைக்கு எத்தகைய சான்றா தாரங்களும் தேவைப்படுவது இல்லை; அது புறச்சார்புடைய சான்றாதாரங்களை அடித்தளமாகக் கொண்டு நிற்பது இல்லை; அது உயிர்த்துடிப்போடு இதயத்திற்குள் புலனுணர்வுகளால் செலுத்தப்படுகிறது. எனவே தனக்குத் தானேசான்றாதாரமாக அது அமைகிறது. நம்முடைய இதயங்கள் அவற்றை உண்ம்ை என ஏற்றுக் கொள்கின்றன. நாம் முன்னரே அவற்றை அறிந்திருக் கிறோம் என்பதன்ால், உடனே அதனை நாம் ஏற்றுக் கொள்ள வில்லை. தம் மனத்தின் உளவியல் அமைப்பு எளிதில் அதை உடன் படுகிறது. மனித உணர்ச்சியின் புலனுணர்வுக் காட்சியைத் தீர்மானிக்கும் அடிப்படை உளவியல் விதிகளோடு எவ்வாறோ அது உடனடியாகத் தொடர்பு கொள்ளுகிறது என்பது வேர்ட்ஸ் வொர்த்தின் கருத்தாகும். -. . . . . . . இவருடைய சித்தனைப் போக்கில் இருந்து இலக்கியத்தில் இடம்பெறும் மனித வாழ்க்கை பொதுமையான உண்மைகளையே பிரதிபலிக்கிறது. அவை கனவும் அன்று. கற்பனையும் அன்று; நடைமுறைக்குப் பெரிதும் ஒத்துவரக் கூடிய செயல் நிலை உண்மை யைக் கற்பனைத் திறத்தால் கவின்பெற்று விளங்குமாறு இலக்கியம் படைத்துத் தருகிறது எனும் தெளிவினைப் பெறுகின்றோம். பேட்டர் (Pater) எனும் திறனாய்வாளர் மெய்ம்மையைப் புகைப்படம் போல் இலக்கியம் படி எடுத்துக்கர்ட்டவில்லை; மாறாக மாற்றுவடிவமாக வரைந்து காட்டுகிறது எனும் கருத்தினைப் பல வகையாக விளக்கியுள்ளார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/125&oldid=750931" இலிருந்து மீள்விக்கப்பட்டது