பக்கம்:இலக்கியக் கலை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108; இலக்கியக் கண்வி நடைநய்ம் (style) எனும் கட்டுரையில், இலக்கியமும் வாழ்க்கையும் எத்தகைய தொடர்புடையன என்பதைப்பற்றி இவர் விள்க்கியுள்ளார். "தகவுப்பொருத்தத் (Proportion) தில் ஆசிரியர். நோக்கம் அமைந்து இருப்பதைப் போன்று, தன்னுணர்வுடனோ தன்னுணர்வற்ற நிலையிலோ உலகையே வெறும் நிகழ்ச்சி க்ளைய்ோ அப்ப்டியே ப்ார்த்துப் படியெடுப்பது இலக்கியம் ஆகாது. உலகைப்பற்றியும் உலகிலுள்ள பொருள்களைப்பற்றியும் நிகழ்ச்சி கள்ைப் பற்றியும் படைப்பாளி எவ்வாறு உணர்ந்துள்ளான்ோ, அவ்வ்ர்றே சொற்களால் அவ்வுணர்வுகளைப்படியெடுத்துத் தருவதே இலக்கிய்ம் அவ்வுணர்வுகளை அழிந்தொழியாதவாறு சொற்களில் வடித்துத்தேருபவனே கலைஞன். அவனுடைய படைப்பே அழகுக் கல்ைப் கிடைப்பு அந்த உணர்வுகளை எத்துண்ை அளவிற்கு அழகுறப் படைத்துக் காட்டுகிறானோ அத்துணை அள்விற்கு உண்மையுடைய நல்ல கலையாகத் தகவுப் பொருத்தத்தோடு அமைகிறது" என்பது பேட்டரின் கொள்கையாகும், ~. இக்கருத்தைத் தெளிவுறுத்தவே, இவர் புகைப் படத்தையும்: பார்த்து எழுதும் வரை ஒவியத்தையும் உவமையாகக் காட்டி விளக்கியுள்ள்ார். வாழ்க்கையில் நீக்கமற நிலைத்து நிற்பதே மெய்ம்மையம் (Reality) என்பது. இந்த மெய்ம்மையத்தை நிலைக்களனாகத் கொண்டே, எல்லாவகையான கலைகளும் தோன்றுகின்றன. ஒரு நாளின் பல்வேறு நிகழ்ச்சிகள்|காரணகாரியத் தொடர் அற்ற காலமுறையில், அனுபவத்தின் சிதறல்களாக மெய்ம்மையம் கலைப்படைப்புகளில் வெளிப்படுகின்றன. இந்த மெய்ம்மையத்தில் இடம்பெறும் வாழ்க்கையின்இசில கூறுகளையே தன்னுடைய படைப்புகளில் மீட்டுருவாக்கம் செய்கிறான். இப் பணியைச் செய்யும்போது, வாழ்க்கையை அவன் தொடர்ந்து காணுகிறான்;.முழுமையாகக் காணுகிறான். சீர்மையை விரும்பும் மனம், தொடர்பற்ற முறையற்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஒன்று சேர்க்கிறது: வகைப்படுத்துகிறது. ண்டும் திரும்பப் படைக்கிற்து: ஒருவகைப் புதிய நோக்கில் படம் பிடித்துக் காட்டுகிறது. --- புகைப்படம் ஒரு க்லைப்படைப்பு அன்று. உருவப் 'இவிய) ப்டம் புகைப்படத்தில் இருந்து பல நிலைகளில் வேறுபடுகிறது. வாழ்க்கையின் ஒரு கூற்றினை, தோற்றத்தையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/126&oldid=750932" இலிருந்து மீள்விக்கப்பட்டது