பக்கம்:இலக்கியக் கலை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் வாழ்க்கையும் 109 உள்ளவாறு, பதிவு செய்து காட்டுவது புகைப் படம் அது ஒரு குறி ப் பி ட் ட காலக்கூறில் வாழ்க்கையோ, பொருளோ இருந்த நிலையை மட்டும்தான் காட்டும். தொடர் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் பெறப்படும் பண்பினை வெற்றிமிகு உருவப்படம் நமக்குத் தெரிவிக்கிறது. ஒன்று வாழ்க்கையின் ஒர் இயல்பை உயிரற்ற நிலையில் நம் முன் நிறுத்துகிறது. மற்றொன்று, வாழ்க்கையை உயிர்த்துடிப்பு உடையதாகக் காட்டுகிறது. கலையுணர்வுக் கண்ணோட்டத்தோடு க ைல ளு ன் வாழ்க்கையை நோக்குகிறான். அவனைப் போன்று, வாழ்க்கையை நெருக்கமர்கவும், நுட்பமாகவும் வேறு யாரும் கூர்ந்து நேர்க்குவது இல்லை. இதனால், மற்றவர்களைவிட வாழ்க்கைன்யப்பற்றி மிகுதியாகக் கலைஞன் தெரிந்து கொள்கிற்ான். அன்றாட வ்ோழ்க்கையில் பொதுநிலையில் நாம் காணுகின்ற காட்சிகளைவிடப் "பெரிதும் சிறப்புமிகு பண்புகளை அவன் எளிதில் காணவும், தேர்ந்து எடுக்கவும் இயலுகிறது. இந்த அனுபவப் பின்னணியைக் கொண்டு, வாழ்க்கையோடு ஒத்த சாயலை உடைய மெய்ம்மை யத்தைக் கலைப்படைப்பின் வாயிலாக வெளிப்படுத்துகிறான். கலைப்படைப்பின் உணர்வே முதன்மை இடம் பெறுகிறது. மெய் யான வாழ்க்கை எனச் சொல்லப்படுவதில் காணப்படும் கவனக் குறைவில் இருந்தும், முன்ைமழுங்கிய நிலையில் இருந்தும் நம்மை அது மீட்கிறது. அன்றாட வாழ்க்கையில், பழக்க மிகுதியால் பல அனுபவங்கள் சுவையற்றனவாகி விடுகின்ற்ன. சிக்கல்களாலும் போராட்டங்களாலும் வெறுப்பும் சலிப்பும் தோன்றுகின்றன. இதன் விளைவாக இயல்பாக நம்மிடம் உள்ள் அழகுணர்ச்சி மங்கிவிடுகிறது. ஒயர்த தொல்ல்ைகளாலும் துன்பங்களாலும் வாழ்க்கை கவர்ச்சியற்றதாய், சுமையாய்ப் போய்விடுகிறது. கூர்ந்து நோக்கப்படாமல் எளிதில் மறக்கப்படுகின்ற வாழ்கையின் துடிப்புமிகு பண்புகளை ஆழ்ந்த உயிரோட்ட முடைய பண்புகளை ஒருமுகப்படுத்திக் காட்டுவதே கலை. ":சுவைபட வருவன எல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல்" எனும் இளம்பூரணரின் கருத்து, இங்குக் கலைக்குரியதாகக் கருதத்தக்கதாகும். விரைவில் மறைந்துவிடுகின்ற பண்புகளில், நிலைபேற்றுத்தன்மை உடையனவற்றைக் கண்டறிந்து அவற்றை விடாப்பிடியாகக் கலை பிடித்துக்கொள்கிறது. அது ஒலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/127&oldid=750933" இலிருந்து மீள்விக்கப்பட்டது