பக்கம்:இலக்கியக் கலை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் வாழ்க்கையும் 111 தலாலேயே படைப்பு இலக்கியப்பணி புரிந்ததாகக் - கூ றுவர். எனினும், அவர்களுடைய படைப்புகள், மெய்ம்மையத்திற்குப் புறம்பானவையாகவோ. மாறானவையாகவோ அமையவில்லை. 'வாழ்க்கையைப் போன்ற அல்லது, வாழ்க்கையோடு ஒத்து வருகின்ற படிமங்களையே நாம் கலைப்படைப்பு களில் காண விரும்புகிறோம். அந்தப் படிமங்களில் நம் பயிலறிவைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் அரைகுறை யாக நாம் படைகின்றோம். ஆனால், அவை கலையழகும் முழுநிறைவான வடிவமும் பெற்ற நிலையில் கலைஞன் வெளிப் படுத்துகிறபொழுது அற்புதமாக" வியக்கத் தக்கனவாக அமைகின்றன. “. . . . . . . . ; . . . . . நம்முடைய பயிலறிவின் பாற்பட்ட வேட்கையால் அரை குறையாகப் படைக்கப்படும் வாழ்க்கை உண்மைகளைச் சார்ந்த படிமங்களைக் கலைஞனாலேயே முழுநிறைவு உடை யதாகச் செய்துதர முடிகிறது; அவற்றைத் தெளிவு உடையதாகவும் ஆக்கமுடிகிறது; மற்றும் பரந்துபட்ட சூழ்நிலையில் பொருத்திக் காட்டவும் இயலுகிறது; இச் செயல்களினால் வாழ்க்கையின் கூறுகள் அனைத்தையும் விளக்கம் பெறச் செய்கிறான். அவனுடைய கற்பனை ஆற்றலின் தகுதிக்கேற்ப, பிற மனிதர் களால் செய்யப்படுவனவற்றைவிட உறுதியும் நேர்த்தியும் வாய்ந்த கலைப்படைப்புகளை வாழ்க்கையின் உயிரோட்டத் தோடு எழிலோவியங்களாக - சொல்லோவியங்களாகப் படைக்கிறான். இக்கலைப் படைப்புகளில் இடம்பெறும் உண்மை கலைஞன் அதன்ை உண்ர்ந்தவாறு சிற்சில ஒப்பனை களின் வாயிலாகச் சித்திரிக்கப்படுகிறது. . . . " மேற்கண்ட ஆய்வில் இருந்து புலனாகும் உண்மைகள் சிலவற்றைத் தொகுத்துக் காண்போம். இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் மிக நெருக்கமான உறவு இருந்துவருகிறது. இதற்குக் காரணம் இலக்கியம் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தோன்றுவதாகும். அடுத்து இலக்கியம் காட்டும் வாழ்க்கை எத்தகையது? என்பதையும் கண்டோம். வாழ்க்கையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உலகப் பொதுமை வாய்ந்த சிறப்பு இயல்புகளின் அழகோவியமாக இலக்கியம் படைக்கப் படுகிறது. இலக்கியத்தில் இடம்பெறும் உண்மை படைப்பாளியின் கற்பனைத்திறனால் குறிக்கோள் இயல்போடு கலையழகு வாய்ந்ததாகக் காணப்படுகிறது. இதில், கதைஞனின்-படைப் பாளியின் பயிலறிவால் உருவாக்கப்பட்ட உணரும் முறைக்கே |ற்ப,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/129&oldid=750935" இலிருந்து மீள்விக்கப்பட்டது