பக்கம்:இலக்கியக் கலை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 இலக்கியக் கல்ை மெய்ம்மையம் செறிவு அல்லது நெகிழ்வுடையதாகக் காட்டப் படுகிறது. - х இலக்கியம் காட்டும் வாழ்க்கை உலகியல் வழக்கின் மறுபதிப்பு அன்று நாடக வழக்கில் (முற்றிலும் புனைந்துரை) வளிப்பாடும் அன்று நாடகவழக்கும், உலகியல் வழக்கும் ஏற்ற முைறயில் இணைந்தும் இழைந்தும் இயங்குவதனால் வெளிப்படும் புலனெறி வழக்கின் உந்துதலால் பூத்துக் குலுங்குவதாகும். இந்தக் கொள்கையைக் கிரேக்க நாட்டின் மெய்ப் பொருள் கண்ட வித்தகர் அரிஸ்டாடில் அறிவுறுத்தியுள்ளார். அவருடைய கருத்திற்கு வலிவும் பொலிவும் அளிக்கும் வகையில், தமிழகத்தின் தொல் பேராசான் தொல்காப்பியனார், தம்முடைய கலைக்கோட்பாட்டைத் தெளிவுறுத்தியுள்ளார். , ஒரேக்க அறிஞனின் சிந்தனைப்போக்கை, அக்காலத்தில் தொல்காப்பியர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை; ஆனால் அரிஸ்டாடிலின் கருத்தைவிட சிறந்த கலைக்கோட்பாட்டு' விளக்கமாகத் தொல்காப்பியனாரின் சிந்தனை அமைந்து இருக்கிறது: . - ... & -- - மேற்கு நாடுகளில், அரிஸ்டாடிலிற்குப் பிறகு தோன்றிய கலையியல் அறிஞர் எல்லாருமே யாதாகிலும் ஒருவகையில் அரிஸ்டாடிலின் கருத்தினை ஏற்றுப் போற்றியுள்ளனர். புதிய வண்ணத்தில் வடிவம் தந்து வாழ வைத்துள்ளனர், வளர்த்து வருகின்றனர். - - ஆனால், தொல்காப்பியரின் கலைக்கோட்பாட்டை, முன்னோர் மொழி பொருளைப் பொன்னேபோல் போற்றுவ தோடு அமைந்துவிட்டோம். புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்பப் புதிய எண்ணப்போக்குகளை அதனோடு சேர்த்து விளக்குவதன் மூலம், ஒப்பிட்டு ஆராய்வதன்மூலம், தமிழரின் கலைக்கோட் பாட்டிற்குப் புதுமெருகு ஊட்டுவதற்குத் தவறி விட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/130&oldid=750937" இலிருந்து மீள்விக்கப்பட்டது