பக்கம்:இலக்கியக் கலை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் கடப்பாடு 115 ளுணர்வைப் பெருக்குவது; அதே நேரத்தில் கண்டிப்பும் கடமை யுணர்வும் நிறைந்தது; எதிர்காலத்தில், ஏற்றமுறத் தன் மக்கள் வாழவேண்டும் எனும் இன்பக் கனவின் புனையா ஒவியங்களைக் கொண்டு ஒளிர்வது தாயின் உள்ளம். இந்த இயல்புகளும், இலக்கியத்திற்குத் தேவைப் படுகின்றன. இந்த இயல்புகள் எல்லாவற்றையும் குறைவறப் பெற்ற இலக்கியமே என்றும் வாழும் இலக்கியம். மற்றவை எல்லாம் புற்றீசல்கள் போலத் தோன்றுவன; எளிதில் அழிந்துவிடுவன. பலவற்றிற்கு மறுபிறப்பே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. இப்பொழுது மேற்கண்ட கற்பனைக் கலையரசியாகிய இலக்கியத்தின் இயல்புகளைக் காண்போம். கன்னிப் பெண்ணின் எழில்மிகு கவர்ச்சிப் பண்பு இலக்கியத்தில் எப்படி அமைகிறது? சொல் நயத்தாலும், பொருள் நயத்தாலும், ஒலி நயத்தாலும், உணர்ச்சிப் பெருக்காலும் அமைகிறது. கவர்ச்சி யின் விளைவு இன்பம் எனச் சொல்லத்தேவை இல்லை! குடும்ப விளக்காகிய இல்லத்தரசி கணவனை இன்புறுத்து கிறாள். அதே சமயத்தில், அவன் வாழ்க்கை உயரவும் சிறக்கவும் அரும்பாடுபடுகிறாள்: தேவைப்படும் பொழுது, நயமாக அறிவுரை கூறி, அவனை நெறிப்படுத்தவும் முயலுகிறாள். இதனால், பெறப் படுவன யாவை? மனைவி வெறும் இன்பப் பெட்டகம் அன்று; தேவைப்படும் பொழுது, அறிவுரை கூறும் ஆற்றலும், நெறிப்படுத்தும் திறனும் உடையவளாகத் திகழுகிறாள். இதனை இலக்கியத்திற்குப் பொருத்திக் சாண்போம் இன் லக் துவது-படிப்பவரை மகிழ்விப்பக இலக் சியத்தின் ب : . وم. جي- جم கடப்பாடு. அடுத்து, இல்ல கர வோர்க்கு - -y தணர் ஒம்பலும், துறவோர்க்க "Ετή ή τ τωr h, - ー、 கோடலும் சமுதாயக் கடமைகளாக இருப்பதைப்பே ல, திற்கும் பல சமுதாயக் கடமைகள் உள்ளன. மக்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இலக்கியம் அரும்புகிறது; சமுதாயச் சீர்கேடு களைச் சாடுகிறது; புதியதோர் உலகினை உருவாக்க உந்துகிறது முன்னேtரின் மதிப்புறு அனுபவத்தை, பல்வகை நிலையில் இழைத்துத் தருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/133&oldid=750940" இலிருந்து மீள்விக்கப்பட்டது