பக்கம்:இலக்கியக் கலை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தோற்றம் பற்றிய கொள்கை 121. இனி, இவற்றின் இயல்புகளை முறையாக நோக்குவேர்ம். அகத்தெழுச்சிக் கொள்கையில் இலக்கியம் தோன்றுவதை : முன்னரே கண்டோம், 2. உறுப்பியக் கொள்கை "இலக்கியம் என்பது ஒரு முழுமைப் பொருள். அதற்குப் பல்வேறு உறுப்புகள் உள்ளன. அவை இணைந்தும், இழைந்தும் செயற்பட்டால்தான், அந்த முழுமைப் பொருளின் வடிவையும். அழகையும் நாம் கண்டும் உணர்ந்தும் போற்ற முடியும் என்பது உறுப்பியக் கொள்கையாகும். இது, நம்முடைய தொல்காப்பியனாரின் செய்யுட் கொள்கை'யிலும் அரிஸ்டாடிலின் நாடகக் கொள்கை"யிலும் இலைமறை காய் போல, இலங்குவதைக் காணலாம். கிரேக்கப் பழங்கதைகளில், மினோட்டார் (Minotaeur) எனும் ஒரு கற்பனை விலங்கு அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அதற்குப் பலவகையான கைகளும். கால்களும், வாலும் உண்டு என்பது கிரேக்கர்களின் கற்பனை, அதன் உடலை, உறுப்புகளே மறைத்துவிடுமாம் அதனுடையகொடுரமான தலையும் சிக்கல் மிகுந்த தொகுதியாக விளங்கும் அதன் இந்த உறுப்புகளே காண்பவருடைய கண்களுக்குப் புலப்படுமாம். o - இந்த விலங்கின் அமைப்பையும் அழகையும் அரிஸ்டிாடில், நாடகத்திற்கும், காப்பியத்திற்கும் உவமையாகக் கூறியுள்ளார். அதன் உறுப்புக்களைத் தனித்தனியே அறுத்து, எடுத்துவிட்டால்: (தீசியஸ் எனும் கிரேக்க இளவரசன் இவ்வாறு செய்தானாம்), அதன் வடிவ அழகு குலைந்து விடும்ாம். எனவே, அதன் உறுப்புகளை எல்லாம் ஒருங்கிணைந்த கோலத்திலேயே அதனைக் காண் வேண்டுமாம். இதைப் போன்றதே நாடகமும் காப்பியமுமாகும் என்பது அரிஸ்டாடிலின் கருத்து, இந்தக் கருத்தைச் சிறிது விரிவுபடுத்தி பொதுநிலையில் இலக்கியத்திற்குப் பொருந்தும் கொள்கையாக, ஏப்ராம்ஸ் உருவாக்கியுள்ளார். பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், தொல் காப்பியனாரின் இலக்கியக்கொள்கை, உறுப்பியக்கொள்கை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/139&oldid=750946" இலிருந்து மீள்விக்கப்பட்டது