பக்கம்:இலக்கியக் கலை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. இலக்கியக் கலை யாகவே காட்சி தருவதை, ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்தியுள்ளார். உறுப்பியக் கொள்கையிலே, பொருள் வேறு, வடிவம் வேறு' எனும் பாடுபாடு கிடையாது. இவ்விரண்டும் உறுப்புகளாக இணைந்து இயங்குகிற பொழுதே, இலக்கியம்’ எனும் உயிர்த் துடிப்பு வாய்ந்த கலைப் படைப்பு தோன்றுகிறது. இனி, முப்பத்து இரண்டு செய்யுள் உறுப்புகளைக் கூறும், தெர்ல்காப்பிய நூற்பாவைக் காண்போம். - - 'மாத்திரை, எழுத்தியல், அசைவகை எனாஅ . யாத்த சீரே, அடி, யாப்பு, எனாஅ மரபே. தூக்கே தொட்ைவகை எனாஅ . iோக்கே, பாவே, அளவியல் எனாஅத்' திணையே, கைகோள், கூற்றுவகை எனாஅக் கேட்போர், களனே, காலவகை எனாஅ பியனிேமெய்ப்பாடு எச்சவகை எனாஅ. முன்ன்ம், பொருளே துறைவகை எனாஅ மாட்டே வண்ணமொடு, யாப்பியல் வகையின் ஆறுதலை யிட்ட அந்நூல் ஐந்தும் அம்மை, அழகு, தொன்மை, தோலே, விருந்தே, இயைபே, புலனே, இழைபு எனாஅப் பொருந்தக் கூறிய எட்ட்ொடும் த்ொகை_இ நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே' என்பது செய்யுளியலின் முதல் நூற்பா, இதில் செய்யுளின் வடிவக் கூறுகளும் பாடுபொருளை எடுத்துரைக்கும் கலைத் திறன்களும் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளன. இந்த நூற்பாவில், மாத்திரை முதல் அளவியல் ஈறாக்ச் செர்ல்லப்பட்டுள்ள பன்னிரண்டு உறுப்புகள் யாப்பியல் (வடிவம்) தொடர்பானவை. திணையில் தொடங்கி, வண்ணம் வரையில் கூறப்பட்டுள்ள பதினான்கு இயல்புகளும் பெரிதும் பாடுபொருளோடு (உள்ளடக்கம்). தொடர்புடையவை. இந்த இருபத்தாறு உறுப்புகளும், உறுப்பியக் கொள்கையின் பிழிவாக அமைந்துள்ளன என்பது பல்கலைச் செல்வரின் கருத்தாகும்

இந்த நூற்பாவிற்கு உரை விளக்கம் தந்துள்ள பேராசிரியர் எனும் உரையாசிரியர், • . . . . . . . . . . o
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/140&oldid=750948" இலிருந்து மீள்விக்கப்பட்டது