பக்கம்:இலக்கியக் கலை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124. இலக்கியக்கலை 8. அறிவியில் கொள்கை இலக்கியம் படைக்கப்படுவதே மனிதன், மனிதனாக வாழ, வழிகாட்டுவதற்கும், அவனுடைய வாழ்க்கையைச் செம்மைப் படுத்தி உயர்த்துவதற்கும், இறுதியாக இயலுமானால், அவன் ஆன்மீக் விடுதலை, (பிறப்பறுத்து வீடுபேறு அடைவதற்கும்) பெறுவதற்கும் உதவுவதற்காகவே என்ற எண்ணப்போக்குப் பண்டை உலகில் முனைப்பாக இருந்து ೧ುಕಿಹ.} , - - - மனித வாழ்வை மாண்புறச் செய்யும் அறநெறிப் பயன் மதிப்பையும், பொருளியல் சார்ந்த பயன் மதிப்பையும், காமஞ் சார்ந்த ஐம்புல இன்பப் பயன் மதிப்பையும் ஒருவன் மதித்துப் போற்றுவானாகில், அதன்வழி ஆன்மீக விடுதலை வந்தமையும் என நம் முன்னோர்கள் நம்பினர். இந்த அறநெறிப்பட்ட வாழ்க்கையை, வரைப்படமாக்கிக் காங்டுவதே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்று பிளேட்டோ முதல் காண்ட் (E-Kant) வரையில் வாழ்ந்த, மேனாட்டுமெய்யுணர்வாளர்கள் கருதினர். நம் நாட்டு அறிவியல் சிந்தனைப் போக்கில், மிதமாக அளவாக நெறி ய்ாடு இன்பந்' துய்ப்ப்து, அறவாழ்வின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. . . . . . . t ஆனால், மேற்கு நாட்டுச் சிந்தனையாளரிடை அறிவுரை கூறுவதற்காகவே இலக்கியம் படைக்கப்படுகிறது எனும் எண்ணம், பேர்+ற்றல் வாய்ந்ததாக விளங்கியது. இந்த முறையில், இலக்கியம் பட்ைக்கப்படுவதையே, அறவியல் கொள்கை சார்ந்த இலக்கியத் தோற்றம்’ எனச் சுட்டுவர் இக் கொள்கை, இலக்கியத்தின் ஒரு செயற்பாட்டையே, அசுர வடிவம்ாக்கிக் காட்டுவதாகும். மனித்ன் இலக்கியத்தைப் படிப்பதற்குக் காரண்ம் அறக் கருத்துகளைத் தெரிந்து கொள்ளு. வதற்காக் என்பது, நாகரிக முதிர்ச்சி அடைந்த காலத்தில், மனித குலத்தின் சிந்தனையில் தோன்றிய கருத்தாகும். -- ஆதி காலத்திய இலக்கியம், தனி மனிதன் ஒருவன் பெற்ற இன்பத்தையும், மகிழ்ச்சியையும், துன்பத்தையும் வருத்தத்தையும் பிறரோடு பகிர்ந்துகொள்ளுவதற்காகத், தான் என்பதைப் பல்வேறு இலக்கியங்கள் படைக்கப். பட்டுள்ளதன் நோக்கத்தில் இருந்து நாம் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/142&oldid=750950" இலிருந்து மீள்விக்கப்பட்டது