பக்கம்:இலக்கியக் கலை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் தோற்றம் பற்றிய கொள்கை #35 எனவே, அறவியல் உந்துதல் சக்தியாலேயே இலக்கியம் படைக்கப் 'படுகிறது என்பது மனித மனவியல்புக்குப் பொருந்தி வருவதாக இல்லை என்பாரும் உண்டு. "இன்பம் என்பது எல்லா உயிர்க்கும் தான் அமர்ந்து வருவது அன்றோ? அழகுணர்வைப் பற்றிய எண்ணமே இல்லாதவர்கள், சிறந்த கலைப் படைப்பை அளிக்க இயலாது எனும் அனுபவ உண்மையும் இங்குக் கருதத்தக்கது. ; : : - "அறத்தான் வருவதே இன்பம்" எனும் கருத்தினைக் காட்டி 'அறத்தின் பயன் இன்பம் தானே! என வாதிடலாம். படிப்பவருக்கு மகிழ்வூட்டும் நோக்கம் வாய்க்கப் பெறாத இலக்கியம், தல்புராணங்களைப் போன்ற வெறும் குப்பை என ஒதுக்கப்படும். - 4. அழகியல் அல்லது முருகியல் கொள்கை ஒரு படைப்பு இலக்கியத்தை, அதனுடைய கருத்தைக் கவரும்உள்ளத்தைச் சுண்டி இழுக்கும் அழகுணர்வின் வெளிப்பாட்டு வடிவமாகக் கருதுகின்ற எண்ணப் போக்கின் அடிப்படையில் இலக்கியம், முதன் முதல் தோன்றி இருக்கவேண்டும் எனும் கருத்தை எடுத்துரைப்பதே இக் கொள்கையாகும். அழகான பொருள், வற்றாத இன்பவூற்று' எனும் எண்ணப் போக்கின் பின்னணியில், விளக்கப்படுவதே அழகியல் அல்லது முருகியல் கொள்கையாகும். - அழகைக்" கண்டு உணர்வதாலும் அனுபவிப்பதாலும் படைப்பாளன் உள்ளத்திலே அது அகத்து எழுச்சியைத் தோற்றுவிக் கிற்து. நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் விழுமிய உணர்வோடு, பிறருக்கு எடுத்துரைப்பதே பிறரையும் அனுபவித்து இன்புறுமாறு செய்வதே, படைப்பாளனின் நோக்க மாக அமைகிறது. இத்தகைய அகத்து எழுச்சியால் தோன்றுவதே இலக்கியம் எனும் கருத்தினை, மையமாகக் கொண்டு விளக்கப் படுவதே அழகியல் அல்லது முருகியல் கொள்கையாகும். ஒழுங்க்ான தன்மை நோக்க மே அழகிய கலைப் படைப்பின் பண்பாகும்; வெறும் உணர்ச்சிப் பெருக்கால், உருவெடுப்பது அழகு அன்று. இசையிலும், ஒவியத்திலும், பிற கலைகளிலும் ஒழுங்குணர்வு இழையோடிச் செல்லு வதைப் போல, இலக்கியத்திலும் அது அமைதல் வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/143&oldid=750951" இலிருந்து மீள்விக்கப்பட்டது