பக்கம்:இலக்கியக் கலை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் தோற்றம் பற்றிய கொள்கை 127 தன்மை மறந்த நிலையில் கலைஞன் ஊன்றிவிடுகின்றான். இதனை யோக நிலை என்பர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி. இந்தத் தன்னை மறந்த லயந்தனில் மூழ்கி இருக்கும் பொழுது உள்ளதை மாற்றவும், இல்லாததைப் புகுத்தவும், காணாததைக் காட்டவும், கருதாதை உணர்த்தவும் அந்தப் பாவனை வழிப்பட்ட ஒன்றல் தன்மையால் கலைப்படைப்பு வெளிப்படுகிறது. - இந்த் அனுபவ முதிர்ச்சியால் உள்ளத்தில் எழும் எக்களிப்பின் தூண்டுதலால், சுவைஞனின் - கலைஞனின் நோக்கினை அடிப்படையாகக் கொண்ட அனுபவம்ே அழகு, எனவும் விளக்குவர். - இத்தகைய அழகியல் நோக்கு, திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு. இஃது என் சொல்லியவாறோவெனின், யாவன் ஒருவன் யாதொரு பொருளைக் கண்டானேர், அக் கண்டவற்கு அப்பொருள் மேல் சென்ற விருப்பத்தோடு கூடிய அழகு. அதன் மேல், அவற்கு விருப்பம் சேறல் அத்னில் சிற்ந்த உருவும், நலனும், ஒளியும் எவ்வகை யானும் பிறிதொன்றற்கு இல்லாமையால், திரு' என்றது அழகுக்கே பெயராயிற்று. அது கண்டவனுடைய விருப்பத்தானே எழுந்தது. ஆதலால், திரு வென்பது அழகே என்று அறிக. அதன்ால், திரு'என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கமே.தான். கண்ட வடிவின் உயர்ச்சியையே கூறினான் ஆமெனக் கொள்க' என்ப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளமை இங்குக் கருதத் தக்கதாகும். இந்தப் பண்டைத் தமிழரின் அழகுக் கொள்கையிலும், ஒழுங்கு இசைவு கவர்ச்சி இன்பம்’ எனும் இயல்புகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடே அழகு எனும் புத்துலகச்சிந்தனையின் கூறுகள் அமைந்து இருப்பதைக் காணலாம். எனவே, அழகு" பற்றிய கருத்துருவம் (Ideology), அடிப்படையில் ஒன்றாக இருப்பது புலனாகும். - இந்தப் பின்னணியிலும், இலக்கியப் படைப்பைக் கூர்ந்து நோக்கலாம். இலக்கியப் படைப்பின் தோற்றத்திற்கு, மித மிஞ்சிய அழகுணர்வே, 'உந்துதலாகக் கருதுவது ஒரு வகையில் பொருந்தும். '* , « W „..., ... , , . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/145&oldid=750953" இலிருந்து மீள்விக்கப்பட்டது