பக்கம்:இலக்கியக் கலை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: இயல் : 11 திறனாய்வாளன் யூார்? இலக்கியமும் திறனாய்வும் - இலக்கியம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானதாகும் அதன் திறனாய்வும். யாராவது ஒருவன் ஒரு பாடலையோ, அன்றி ஓர் உரைநடையையோ ஆக்கியிருப்பின், அதனைக் கற்ற ஒருவன் அது சிறந்தது என்றோ, மட்டமானது என்றேர் கூறித்தான் இருப்பான். அவ்வாறு ஒருவன் கூறும் பொழுது திறனாய்வு அங்கே தோன்றிவிடுகிறது. ஆகவே, திறனாய்வு என்று கூறினால் 'முடிவு கூறல் அதனுள் அடங்கியிருத்தல் கண்கூடு. இலக்கியத் திறனாய்வாளன், ஓர் இலக்கியத்தை நன்கு கற்றுத் தனது கூர்த்த அறிவினாலும், அக்கலையை அனுபவிக்கத் தனக்குள்ள தனிப்பட்ட உணர்வி னாலும், நன்கு ஆராய்ந்து. அவ்விலக்கியத்தின் குறைவு, நிறைவு களை மதிப்பிட்டு, அது சிறந்தது என்றோ மட்டம்ானது என்றோ கூறுபவனாவான். இத் திறன்ாய்வு என்ற சொல் இலக்கியத்தில் பயன்படும்பொழுது, குறைவு நிறைவு கூறும் நூல்களைமட்டும் குறிக்காமல் இலக்கியத்தைப் பற்றிக் கூறும் இலக்கியங்களையும், அதுபற்றி வெறும் ஆராய்ச்சி செய்யும் நூல்களையும், அதன் பேருரைகளையும் உட்கொண்டு குறிக்கிறது. எனவே, திறனாய்வு செய்யும் நூலுக்கும். எதனைப்பற்றி இத் திறனாய்வு நிகழ்கிறதோ அந்த இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்று அறிய வேண்டும். வாழ்க்கையைப்பற்றி ஆராய்ந்து அதன் சிறந்த பண்புகளைக் கூறுவது இலக்கியம் எனப்படும். அவ்விலக்கியத்தை ஆராய்வது திறனாய்வு எனப்படும். - தமிழில் இல்லை . \மிகச் சிறந்த இலக்கியம் தோன்றி வளர்ந்த தமிழ் மொழியில் ன்ன காரணத்தாலோ திறனாய்வு நூல்கள் தோன்றாமற் போய்விட்டன. ஒருவேளை இருந்திருப்பின், அவை நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், கிடைத்த நூல்களையும், நூற்பகுதி களையும் கொண்டு பார்த்தால், திறனாய்வு இலக்கியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/151&oldid=750960" இலிருந்து மீள்விக்கப்பட்டது