பக்கம்:இலக்கியக் கலை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாய்வாளன் யார்? 135 இலமே' என்ற பொன்மொழியைக் கடைப்பிடித்து விட்டான் என்பதே அவ் விடையாகும், - இன்றைய நிலை ஆனால், இன்று தமிழ்மொழியில் தோன்றியுள்ள திறனாய்வு நூல்களைப் பார்த்துவிட்டால், பழந்தமிழன் முறையே மிகச் சிறந்தது என்ற எண்ணம்கூடத் தோன்றுகிறது. 'நூல் மதிப்புரைகள் என்ற தலைப்பில் பத்திரிகைகளிலும், வானொலி யிலும் வெளிவரும் திறனாய்வுகளைக் காண்கிற தமிழன் எவன் தான் வியப்படையாமல் இருக்க முடியும்? பெரும்பாலும் நூலைப் படியாமலே திறனாய்வு செய்யப்படுகிறது. நூல் எழுதித் திறனாய்வுக்கு அனுப்பியவர்கட்கே இவ்வனுபவம் தெரியும். ஒருவேளை அதனை ஒரு திறனாய்வாளர் படித்துவிட்டாலும், அவர் ஆய்வு, ஒன்று ஒரே புகழ்மாலையாக இருக்கும், அல்லது ஒரே ஒப்பாரியாக இருக்கும். முதல் வகையைச் சேர்ந்தவர், 'நன்கு அச்சியற்றப்பெற்றிருக்கிறது; அழகான பைண்டு; புத்தகசாலைக்கும் கைக்கும் அணிகலம் என்ற முறையில் விமரிசனம் செய்வார். இரண்டாவது வகையார் இதனை விடச் சிறந்த ஒரு நூல் தோன்ற முடியாது' என்பார். மூன்றாவது வகையார் ஏன் இந்நூல் தோன்றிற்று என்று தெரியவில்லை’ grešrų irrtř. - - இவ்வாறு கூறுவதால் திறனாய்வு நூலே தோன்ற வேண்டாம் என்று கூறுவதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். திறனாய்வு நூல்கள் இல்லையென்றால் இலக்கிய உலகின் சிறந்த ஒர் உறுப்பு இல்லை என்றே கூறவேண்டும். மேலை நாட்டைப் பொறுத்தவரை இக் குறைபாடு வேறு வகையில் இருக்கிறது. அங்குத் கோன்றும் இலக்கியங்களைக் காட்டிலும் திறனாய்வு நூல்கள் மிகுதியாக உள்ளன. திறனாய்வு நூலுக்கும் ஒரு திறனாய்வு நூல் தோன்றும் நிலைகூட அங்கே சாதாரணம். இனி, இத் திறனாய்வாளனைப் பற்றி ஒரு சிறிது ஆராயலாம். திறனாய்வு வேண்டா திறனாய்வுநூல் வேண்டர் எ ன்று கருதுகிறவர்கள் பலருண்டு. திறனாய்வு நூல்களைக் கற்கும் நேரத்தில் இலக்கியத்தையே கற்றுவிடலாமே எ ன் ப து அவர்கள் கொள்கை. மேலும் ஓர் இலக்கியத்தைப் பற்றித் திறனாய்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/153&oldid=750962" இலிருந்து மீள்விக்கப்பட்டது