பக்கம்:இலக்கியக் கலை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 - இலக்கியக் கலை நூல் ஒன்று தோன்றிற்று என்றால் அந் நூல் எத்தகைய வரால் இயற்றப்பெற்றது என்று அறியவேண்டும். அவர் இலக்கியத்தைத் தாமே நன்கு கற்றவரா? கற்றாலும் திற னாய்வு செய்யும் தகுதி அவரிடம் உண்டா? தகுதி இருப் பினும் எத்தகைய மனநிலையுடையவர் அத் திறனாய்வாளர்? இவையெல்லாம் அறிந்த பிறகே அவர் நூலைக் கற்றல் வேண்டும். மேலும், இவையெல்லாம் நன்கு அமைந்திருப் பினும், அவர் நூலின் ஏதோ ஒரு பகுதியைச் சுவைத்துத் தானே திறனாய்வு செய்திருப்பார்? அதை மட்டும் படித்து விட்டால் இலக்கியம் முழுவதையும் கற்றதுபோல் ஆகுமா? இவை நியாயமான ஐயங்களே யாகும். தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் இந்த ஐயங்கள் நியாயமே. அனைவரும் 'திறனாய்வு நூல் என்ற பெயரில் வெளிவரும் போலி நூல்களைப் படித்துவிட்டு மூல இலக்கிங்களைக் கற்றது போல இறுமாந்து திரிகின்றனர். இலக்கியத்தைக் கற்ப தற்கு இது சுருக்கு வழியாகவே கருதப்பெறுகிறது. பத்தாயிரம் கவிதைகட்குமேல் உள்ள கம்பராமாயணத்தை முழுவதும் கற்றல் எல்லாருக்கும் இயலுவதொன்று அன்று. அதற்கேற்ற அறிவுத்திறன் இருப்பினும் காலம் குறுக்கே நின்று தடை செய்யும், அவசரமே வடிவான இக்காலத்தில், அதற்கெனவே பொழுதைக் கழிக்கவேண்டிய ஒரு சிலர் தவிர, ஏனையோர் இரர்ாமயணத்தை முழுவதுங் கற்றல் - ஏன் - ஒரு முறை புரட்டக்கூட இயலாதுதான். அதற்காக இராமாயணத்தைப் படியாமல் இருந்து விடலாமா? அவ்வாறு செய்வதால் வாழ்க்கையில் அடைய வேண்டிய ஒரு பெரும் பயனை, இலக்கியத்தால் பெறும் இன்பமாகிய பயனை, அடையாதவர்களாக ஆகிவிடுவோம். இராமாயணத்தைப் படியாமலே இருந்துவிடுவதைவிட அதனைப் பற்றிய திறனாய்வு. செய்கிற நூலை மட்டுமேனும் படிப்பது சிறந்ததொன்றே. நமது தாய்மொழியிலுள்ள இலக்கியங்கள் தவிரப் பிறமொழி இலக்கியங் களையும் நாம் ஒரளவு அனுபவிக்க வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில், திறனாய்வு நூல்கள் பெரிதும் பயன்படும். எனவே, கம்பனை முழுதும் படித்து அனுபவிக்க இயலாதவர்கள், வெள்ளகால் சுப்பிரமணிய முதலியாரவர்களின் கம்ப ராமாயண் இன்கவித் திரட்டையும், வ் வே. சு, ஐயரவர் 'களின் கம்பராமாயண ரசன்ை'யையுமாவது கற்றல் ஏற்றது. பல சமயங்களில் நேரடியாக நூலைக் கற்பதைக் காட்டிலும் திற்ன்ாய்வு நூல் நமக்கு அதிகப் பயனை அளிக்கிறது. பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/154&oldid=750963" இலிருந்து மீள்விக்கப்பட்டது