பக்கம்:இலக்கியக் கலை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாய்வாளன் யார்? - 139 அரசியல் வாதிகள் தங்கள் கருத்தை இலக்கியத்தில் ஏற்றி அதனால் தமிழ்மொழிக்கே தீங்கு விளைப்பதில் விந்தை ஒன்றுமில்லை. - இது ஒருபுறமிருக்கச் சிறந்த திறனாய்வாளன் எத்தகையவன் என்று காண்போம். தமிழ்மொழியளவில் இதுவரையில் தனிப் பட்ட திறனாய்வு நூல்கள் அதிகம் தோன்றவில்லை என்ற காரணத்தால் திறனாய்வாளரே இல்லை என்று கூறிவிட முடியாது. மாதவச் சிவஞான சுவாமிகளும், சோழவந்தான் அரசஞ் சண்முகனாரும் சிறந்த திறனாய்வாளர்க்கெல்லாம் சிறந்தவர்கள், - சிறந்த திறனாய்வாளன் தான் மேற்கொண்ட துறையில் சிறந்த அறிவுபடைத்தவனாக இருத்தல் வேண்டும், அவனுக்கு நுண்மாண் நுழைபுலம்மட்டும் இருந்தர்ல் போதாது எவற்றையும் எளிதில் பற்றிக்கொள்ளக் கூடிய ஆற்றலும், கூர்ந்து நோக்கி அரிய கருத்தையும் எளிதில் அறியும் இயல்பும், இலக்கியம் மனத்தில் ஆக்கும் உணர்வுகளை விடாது பற்றும் தன்மையும் பயனுடைய வற்றைப் பயனிலவற்றிலிருந்து பிரித்து எடுத்துவிடும் பேராற்றலும் அமைந்தவனாக இருத்தல்வேண்டும், இவை எல்லாவற்றிலும் மேலாக அவன் இலக்கியம் கூறவந்ததை அறிபவனாக இருத்தல் வேண்டுமே தவிரத் தன்னுடைய கருத்தை இலக்கியத்தில் ஏற்றும் தவற்றை இழைத்தல் கூடாது. கலைஞனைப்போன்று தன்னுடைய விருப்பு வெறுப்புக்களைத் தள்ளிவைத்துவிட்டு நூலில் கூறிய வற்றை அனுபவிக்கக் கூடியவனே சிறந்த திறனாய்வாளனாவான். நல்லாய்வாளன் இவ்வாறு கூறினதால் எத்தகைய திறனாய்வாளனுக்கும் இத்துணை இயல்புகளும் பூரணமாக அமைந்திருக்கும்" என்ப தற்கில்லை. மனிதனுடைய விருப்பு வெறுப்புக்களை முழுதுமாக அகற்றிவிடுதல் இயலாத தொன்று ஒப்பற்ற திறனாய் வாளரான மாதவச் சிவஞான யோகிகளும் தம்முடைய வெறுப்புக் காரணமாக இளம்பூரண அடிகளை எல்லைமீறித் தாக்குதலையும், சேனாவரையரை எல்லை மீறிப்புகழ்தலையும் காண்கிறோம். மேலும் சிவஞானபோதம் போன்ற நூல்களை யும் மொழி பெயர்ப்பு என்றே கொண்டு திறனாய்வு செய்ததும் இக் கருத்தையே வலியுறுத்தும். திறனாய்வாளன் தான் மேற்கொள்ளும் இலக்கியத்தை மட்டும் கற்றவனாக இராமல், ஏனைய இலக்கியங்களையும் நன்கு கற்றவனாக இருத்தலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/157&oldid=750966" இலிருந்து மீள்விக்கப்பட்டது