பக்கம்:இலக்கியக் கலை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 48. . @ಖಹಥಿಲಹಹ66ರ: இவ்வாறு செய்து முடிவில் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாடல்கள். சிறப்புடையன என்று ஏற்றுக்கொண்டால் அவர் மேற்கொண்ட வழியே சிறந்தது என்ற முடிவிற்கு வரநேரிடும். அவர் மேற். கொண்ட வழி அவருக்குச் சிறந்ததாக இருக்கலாமே தவிரக் குறிஞ்சித்திணை பாடிய பரணர், காமக்கண்ணியார் போன்ற ஏனையோருக்கும் அவ்வழியே சிறந்தது என்று கூறல் ஏலாதன்றோ! செலுத்துநிலைத்திறனாய்வு செய்யவேண்டுமாயின்கபிலர் பாடிய: பாடல்கள் அனைத்தையும் கற்றுப் பிறகு குறிஞ்சிக்குரிய ஒழுக்கத்தைக் கபிலர் எவ்வாறு காண்கிறர்ர்?. என்று காணல் வேண்டும். பிறகு பல கோணங்களிலிருந்து பாடிய அவருடைய பாடல்களில் பொதுத்தன்மை எவை எவை என்று காணல், வேண்டும். இப் பொதுத்தன்மையை அடிப்படையாகக்கொண்டு: கபிலன்ர. அநுபவிக்கச் சட்டங்கள் இயற்றல் வேண்டும். ஆனால், இச்சட்டங்கள் கபிலரை அநுபவிக்கப் பயன்படுமே தவிர, அதே குறிஞ்சித்திணையைப் பாடிய பரணரை அநுபவிக்கப் பெரிதும் பயன்படமாட்டா. எவ்வளவு சிறந்த முறையில் கபிலர் குறிஞ்சித் திணையைப் பாடி இருப்பினும், ஏனையோர்க்கு.அது இலக்கணமாக அமைதல் கூடாது. என்பதே செலுத்துநிலைத் திறனாய்வின் கொள்கை. இதன் மறுதலையான முடிபுமுறைத் திறனாய்வு, இச்செலுத்துநிலைத் திறனாய்வு கூடாது என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகலின் குறிஞ்சி பாடக் கபிலன் என்ற முதுமொழியும் தோன்றிவிட்டது. குறிஞ்சித் திணைப் பாடல்களை ஆராயக் கபிலன் மேற்கொண்ட வழியே இலக்கணமாக அமையவேண்டும் என்று கூறுவதே முடிபு முறையின் அடிப்புடை: மாறுபாடு இதனை மறுக்கும் செலுத்து நிலை, முடியுமுறைத் திறனாய்வுடன் மற்றொரு முறையிலும் மாறுபாடு அடைவதைக் காணல்வேண்டும் நிலைத்துநிற்கும் தன்மையற்று மேலும் மேலும், வளர்ந்துகொண்டு செல்லும் அறிவை அடிப்படையாகக் கொண்டு தானே இலக்கியம் தோன்றுகிறது. எனவே, இலக்கியத்திலும். வளர்ச்சியும் மாறுபாடும் எதிர்தோன்றத்தானே செய்யும். ஆதலால் நிலையற்று மாறும் இல்க்கியத்தை ஆய், நிலையான திறனாய்வுமுறைகளும் சட்டங்களும் பயனற்றவை எனக் கூறவும் iேண்டுமோ? இது செலுத்துநிலைத் திறனாய்வாளர் சுற்று. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/165&oldid=750975" இலிருந்து மீள்விக்கப்பட்டது