பக்கம்:இலக்கியக் கலை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவிதைக்கலை *153 சிட்னி கால்வின் என்றவர் என்சைக்ளோபீடியாவில் தாம் ஏழுதிய "நுண்கலைகள் என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார். 'உலகில் பிறந்த நாம் செய்தே தீரவேண்டும் என்பதற்காகச் சில காரியங்களைச் செய்கிறோம். இவை தமக்கு இன்றியமையாதவை. இன்னும் சிலவற்றை நாம் செய்ய வேண்டுமென்று பிறர் எதிர்பார்க்கின்றனர். இவை தடமைகள் எனப்படும். இவற்றையல்லாமலும் சிலவற்றை நாம் செய்கிறோம். அவ்வாறு செய்வதற்கு. நமது விருப்பமே தூண்டுதலாகிறது. இங்ங்ணம் விருப்பமே காரணமாகச் செய்யப்படும் பல செயல்களில் நுண்கலைகளும் ஒன்று. இவற்றின் விளைவு கலப்பற்றதும் நிலைத்ததுமான இன்பமே. இக்கலை ஓர் அளவுவரை முற்கூட்டியே ஆராய்ச்சி, சிந்தனை, எல்லைக்குட்பட்ட தன்மை இவற்றால் வரையறுக்கப்படுகிறது. அந்த அளவு நீங்கியதும் கற்பனைக்கு எட்டாத மறைபொருளும் தன்னுரிமையும் உடையதாகிறது. உதாரணமாகச் சித்திரக்கலையை எடுத்துக்கொள்வோம். சில நினைவுகளையும் உணர்ச்சிகளையும் அதன் மூலம் வெளியிடலாம். ஆனால் சித்திரம் என்பது கண்முன்னர்க் காணப்படும் பொருளை அப்படியே :படியெடுப்பதன்று. காணுகின்ற கலைஞனுடைய மனத்தில் அது எத்தகைய கர்ட்சி அளித்ததோ அதுவே படமாக அமைதல்வேண்டும். இயற்கைக் காட்சியை வரையும் ஒவியத்திலுங்கூடக் கலைஞன் மனத்தில் இயற்கை, எங்கனம் பிரதிபலிக்கிறதோ அங்ங்னமே திட்டப் படுகிறது. ஒவியம் கண்ணின் உதவியால் திட்டப்படுவதில்லை. மனமும் அறிவுமே அதனைச் செய்கின்றன என்கிறார் கோரோலஸ் டுரான். - - இதுவரையில் கூறியதைச் சுருங்கக் கூறுமிடத்துக் கலை என்பது, இயற்கை ஆன்மக் கண்ணாடியில் பட்டு எதிர்தோன்றும் சாயலேயாகும் என்றும், அங்ங்ணம் எதிர்தோன்றுகையில் மனத்தின் இயல்பூக்கங்கள். உணர்வு, உணர்ச்சி, ஆசை என்பவற்றோடு கலந்தேஅது வெளிவருகிறது என்றும் கூறலாம். நுண்கலைகள் பலவற்றுள்ளும் கவிதை சிறந்தது. ஏனைய இசை, ஓவியம் சிற்பம், கட்டிடம் என்பவையாம். கவிதை என்று சொல்லுக்கும், செய்யுள், பா, பாட்டு என்பவற்றிற்கும் வேற்றுமை உண்டு. இக்காலத்தில் இவை ஒரு பொருட் பன்மொழியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/170&oldid=750981" இலிருந்து மீள்விக்கப்பட்டது